லெஸ்பியன் தன்பாலின ஈர்ப்பை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் ஆல்பம் மகிழினி. ஆண், பெண் மேல் ஈர்ப்பு ஏற்படுவதும் பெண், ஆண் மேல் ஈர்ப்பு ஏற்படுவதும் இயல்பு தான். ஆனால் பிறக்கும்போதே உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றம் என்பது தன்பாலின ஈர்ப்பாளர்கள்.
ஒரு ஆண், பெண்ணை காதலிப்பதையே ஏற்றுக்கொள்ளாத இச்சமூகம் பெண் பெண்ணை காதலித்தால் திருமணம் செய்ய ஏற்றுக் கொள்ளுமா. இதைப்பற்றிய அழுத்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகிழினி ஆல்பம் எடுக்கப்பட்டுள்ளது.
விஜி பாலசுப்ரமணியன் எழுதி, இயக்கி கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் மகிழினி ஆல்பம் இணையத்தில் வெளியானது. இதில் கௌரி கிஷன், அனகா இருவரும் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார்கள். இந்த ஆல்பம் ஆறு நாட்களில் எடுக்கப்பட்டுள்ளது.
கௌரி கிஷன் 96 படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனகா ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தில் நடித்திருந்தார். கௌரி கிஷன், அனகா இருவரும் மகிழினி ஆல்பத்தில் ஓரினச்சேர்க்கை விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடலில் துணிச்சலாக நடித்ததால் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மகிழினி ஆல்பத்தில் 96 படத்தின் இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த ஆல்பத்தில் கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளார். இந்த ஆல்பம் மக்களிடையே ஓரினச் சேர்க்கை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது என்ன.? எதனால இப்படி தோன்றுகிறது என்பதை ஆணித்தனமாக இந்த வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.