தளபதி விஜயின் ரசிகர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த மாஸ்டர் படமானது, நேற்று ரிலீஸ் ஆகி தாறுமாறாக பட்டையை கிளப்பி வருகிறது.
எனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், ஸ்ரீநாத், கௌரி கிஷன்,சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே மாஸ்டர் படத்தில் கைகோர்த்து கைகோர்த்துள்ளது.
இந்நிலையில் 96 படத்தில் குழந்தை நட்சத்திரமாக, தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த கௌரி கிஷன் தனது அசத்தலான நடிப்பை மீண்டும் ஒருமுறை மாஸ்டர் படத்தில் காண்பித்திருக்கிறார்.
எனது மாஸ்டர் படத்தை பார்த்த ரசிகர்கள் இவருடைய நடிப்பை புகழ்ந்து தள்ளியதுடன், இதனால் தளபதி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கௌரியை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் அவருடைய நடிப்பை பற்றி புகழ்ந்து கூறும் கமெண்ட்களையும் எக்கச்சக்கமாக தட்டி விடுகின்றனர்.
இனிமேல் கௌரிக்கு தமிழ் சினிமாவில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.