குழந்தை மித்ராவின் மருத்துவ சிகிச்சைக்கான மருந்துகள் இறக்குமதி வரியை ரத்து செய்தது மத்திய அரசு. மித்ராவின் கள்ளங்கபடமற்ற புன்னகையின் வலியை மாற்ற உதவியது மத்திய அரசு.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் என்ற ஊரைச் சேர்ந்த சதீஷ் குமார் அவர்களின் இரண்டு வயது மகள் தான் மித்ரா. அவருக்கு எஸ் எம் ஏ எனப்படும் ஸ்பைனல் மஸ்குலர் அட்ரபி என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைகள் பலவீனப்படுத்தி அவற்றின் இயக்கத்தை கடினமாகும். மேலும் மூளையில் உள்ள செல்கள் மற்றும் முதுகெலும்பில் உள்ள செல்களை சிதைத்து விடும்.
இந்த எஸ் எம் ஏ நோய்க்கான மருத்துவ செலவுகளும் மிகவும் அதிகம், மருந்துகளும் எளிதாக கிடைக்காத நிலையில் மிகவும் வேதனையின் மித்ராவின் குடும்பம் இருந்தது.
சிறிய அளவில் ஜவுளி வியாபாரம் செய்யும் சதீஷ்குமாரால் மருத்துவ செலவு 22 கோடி ரூபாயை தனி ஆளாக திரட்ட முடியாத நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியிருந்தார்.
மருந்தின் விலை 16 கோடி அதற்கான இறக்குமதி வரி ஆறு கோடி எனவே சுங்க வரி மற்றும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து தருமாறு மித்ராவின் தந்தை மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதன் அடிப்படையில் அவருடைய கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு இறக்குமதி வரியை ரத்து செய்தது இந்த செயலுக்காக அனைத்து தரப்பினரும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.