வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை.. நன்றி தெரிவித்த இஸ்லாமிய மக்கள்!

தற்போது வரை தமிழக அரசின் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் மக்களுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக தற்போது உருது மொழியை தாய் மொழியாய் கொண்டு வாழும் மக்களின் கோரிக்கையை ஏற்று உள்ளது தமிழக அரசு.

அதாவது உருது மொழி பேசக்கூடிய இஸ்லாமிய மக்களின் கோரிக்கை என்னவென்றால், மாநில உருது மொழி கழகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதே. இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, “தமிழ்நாட்டின் – மாநில உருது மொழி கழகத்தை” மாற்றியமைத்து உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே தமிழகத்தில் உருது மொழி பேசக்கூடிய மக்கள், மொழிவாரியாக மிகவும் சிறுபான்மையினராக உள்ளனர். அவ்வாறு இருப்பினும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சிறுபான்மையினர் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மேலும் உருது மொழியை பாதுகாத்திடவும் மாநில உருது மொழி கழகத்தை மாற்றியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் இஸ்லாமிய மக்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தங்களின் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் உருது மொழியை தாய்மொழியாக கொண்டு வாழும் இஸ்லாமிய மக்கள் முதல்வருக்கு தங்களின் நன்றிகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் இந்த கழகத்தில் 15 நபர்கள் கொண்ட நிர்வாக குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்த கழகத்தின் தலைவராக – உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்க உள்ளார். மேலும் டாக்டர். முகமது நயீமுர் ரகுமான் அவர்களும், சிறுபான்மையினருக்கான நல அமைச்சகம், முன்னாள் ஒருங்கிணைப்பாளர் – தெற்கு மண்டலம், இந்திய அரசு, தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி அமைச்சகம் மற்றும் நிதி நிறுவனமும் அவர்கள் துணைத்தலைவர்களாக பொறுப்பேற்பார்கள்.

 

அத்துடன் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் இயக்குனரும், தமிழகத்தின் உருது மொழி கழகத்தின் துணை தலைவராக பணிபுரிவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்குழுவில் உயர்கல்வித் துறையின் முன்னாள் அரசு அதிகாரிகள், உருது மொழி கவிஞர்கள் மற்றும் புலவர்கள், கல்வியாளர்களும், நிதித்துறை சார்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான நல அமைச்சகம் மற்றும் தமிழ்நாட்டின் உருது மொழி கழகத்தின் முன்னாள் பதிவாளரும் உட்பட்டோர் குழுவில் பங்கேற்க உள்ளனர். மிக முக்கியமாக இந்த குழு மூன்று ஆண்டிற்கு செயல்பாட்டில் இருக்கும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News