இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கௌதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் பௌலிங், பில்டிங் என தனித்தனியாக தனக்கு இவர்கள்தான் தேவை என்பதையும் வலியுறுத்தி வருகிறார். இப்பொழுது பிசிசிஐ அவர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்துள்ளது.
ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த காலத்தில் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோரும், பவுலிங் பயிற்சியாளராக மகாம்பரேயும் செயல்பட்டனர். இப்பொழுது அவர்களுடைய ஒப்பந்த காலமும் முடிந்து விட்டது தற்போது இந்திய அணிக்கு எல்லாத்துறையிலும் புதிய ஆட்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கம்பீர் இப்பொழுது பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரையும், பில்டிங் பயிற்ச்சியாளராக ஏற்கனவே ராகுல் டிராவிட் இருந்த காலத்தில் செயல்பட்டதிலீப்பையும் தக்க வைத்துக் கொண்டார். இப்போது பவுலிங் பயிற்சியாளருக்கு மட்டும் வெளிநாட்டு வீரரை பரிந்துரை செய்து வருகிறார்.
பிசிசிஐ தரப்பிலிருந்து இந்திய அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமிபதி பாலாஜியையும், இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்த ஜாகீர் கானையும் பரிந்துரை செய்தது, ஆனால் காம்பீர் அவர்கள் வேண்டாம் என மறுத்து விட்டார்.
இந்திய அணிக்கு வந்த பவுலிங் கோச்
இவர்களுக்கு பதிலாக பாகிஸ்தான் அணிக்கு முன்னால் பௌலிங் பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கல் தான் வேண்டுமென அடம் பிடித்து வருகிறார். பாகிஸ்தான் அணியுடன் உலக கோப்பையில் டிராவல் செய்து வந்தார் மோர்கல்.
ஐபிஎல் லக்னோ அணிக்கு ஆலோசராக செயல்பட்ட காலத்தில் மோர்கல் தான் அந்த அணிக்கு பௌலிங் பயிற்சியாளராக இருந்தார். அப்பொழுது அவர் திறமையை பார்த்து வியந்த காம்பீர் இப்பொழுது இந்திய அணிக்கு அவரை தேர்வு செய்யும் படி செய்துள்ளார். எல்லாமே காம்பீர் விருப்பத்திற்கு ஏற்ப தான் பிசிசிஐ செயல்படுகிறது. அணியின் சீனியர் வீரர்கள் ஓய்வு பெறும் வேளையில் காம்பீர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்கிறார்.