வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும்.. விஜய்க்காக காத்திருக்கும் கௌதம் மேனன்

தமிழ் திரையுலகில் வசூல் நாயகனாக வலம் வரும் விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது பல இயக்குனர்களின் ஆசையாக இருக்கிறது. தற்போது வம்சி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும் வெற்றி மாறன் உள்ளிட்ட பல இயக்குனர்கள் விஜய்க்காக கதையை தயார் செய்து வைத்துக் கொண்டு காத்திருக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் கௌதம் மேனன் விஜய்க்காக ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கலந்த ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து வைத்திருக்கிறாராம்.

Also read:மிரர் செல்பியில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட விஜய்யின் மகள்.. அடுத்த வாரிசு நடிகை ரெடி!

இவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற காதல் திரைப்படங்கள் மற்றும் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற ஆக்ஷன் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் தற்போது சிம்புவை வைத்து வெந்து தனிந்தது காடு திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நீண்ட நாட்களாகவே இவருக்கு விஜய்யுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதை அவர் வெளிப்படையாகவே பலமுறை பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் விஜய்க்கு ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.

Also read:எதிர்பார்ப்பை அசர வைக்கும் சிம்புவின் வெந்து தணிந்த காடு.. எவனும் தொட்டு பார்க்க முடியாத ரீ என்ட்ரி

தற்போது விஜய் ஆக்ஷன் கதைகளில் அதிகமாக நடித்து வருகிறார். ஆனால் அவர் காதலுக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும், அப்படி ஒரு கதையில் அவரை இயக்க வேண்டும் என்றும் கௌதம் மேனன் ஆசைப்படுகிறார்.

ஏனென்றால் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் தான் பொருத்தமாக இருப்பாராம். அவரை விட வேறு யாராலும் அது போன்ற கதைகளில் உணர்வுகளை எதார்த்தமாக கொடுக்க முடியாது என்று அவர் கூறியிருக்கிறார். அதனால் கூடிய விரைவில் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read:அஜித்,விஜய் 50 படங்களில் செய்யாததை சாதித்துக் காட்டிய சூர்யா.. இனியாவது முடியுமா தளபதி.?

Trending News