புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெற்றிமாறனிடம் டோட்டலா சரண்ரான கௌதம் மேனன்.. தனுஷ் சிம்புக்கு அடித்த லாட்டரி

என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின்னர் கௌதம் மேனன் ஹிட் கொடுத்து நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. அதன்பின் அவர் இயக்கிய படங்கள் எதுவுமே அவருக்கு கை கொடுக்கவில்லை. கடைசியாக அவர் இயக்கிய 4 படங்களில் இரண்டு படம் பிளாப்

மீதமுள்ள இரண்டு படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. என்னை நோக்கி பாயும் தோட்டா. துருவ நட்சத்திரம் என இந்த இரண்டு படங்களும் இன்னும் ரிலீசாகவில்லை. இதனால் தனுஷ் மற்றும் விக்ரம் என இருவருடனும் கௌதம் மேனனுக்கு மனஸ்தாபம் இருந்து வருகிறது.

சமீபத்தில் கூட அவர் தனுஷை வைத்து படம் பண்ணுவதற்கு
ஏற்பாடு செய்தார். ஆனால் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மூலம் இருவருக்கும் பிரச்சனை உள்ளது அதனால் தனுஷ் இவருடன் கூட்டணி சேர விரும்பவில்லை.

இப்பொழுது இவருக்கு எந்த கதையும் செட்டாகாததால் இயக்குனர் வெற்றிமாறினிடம் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள், நான் இயக்கி தருகிறேன் என நட்பு ரீதியாக கேட்டு வருகிறாராம். அதற்கு வெற்றிமாறனும் ஒப்புதல் சொல்லி இருக்கிறார். அந்த கதைகளில் சிம்பு மற்றும் தனுசை நடிக்க வைக்க திட்டம் போட்டு வருகிறார் .

விடுதலை படம் மூலம் வெற்றி மாறன் மற்றும் கௌதம் மேனனுக்கு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. அந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் கௌதம் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது வெற்றி மாறன் மட்டுமல்லாது நல்ல இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறார் கௌதம்.

Trending News