Reason for Stopped Directing: கௌதம் வாசுதேவ் மேனன் வேறு ஒரு கோணத்தில் தனித்துவமாய் படங்களை இயக்கும் ஒரு வித்தியாசமான இயக்குனர். பெரிய ஹீரோக்களுக்கு எல்லாம் சரியான ஒரு மாஸ் ஹிட் கொடுத்தவர், இன்று படங்கள் இயக்குவதையே நிறுத்திவிட்டு நடிப்பில் முழு கவனம் செலுத்துகிறார்.
மின்னலே படத்தில் ஆரம்பித்து துருவ நட்சத்திரம் வரை இவர் இயக்கிய படங்கள் ஒரு தனி சிறப்பு வாய்ந்ததாக தான் இருக்கும். அப்படி ஒரு ஸ்டைலிஷ் ஆன இயக்குனர் கௌதமேனன்.காக்க காக்க, வாரண மாயிரம் , வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்றவை இவர் இயக்கத்தில் வந்த சிறப்பு வாய்ந்த படங்கள்.
இப்பொழுது இவர் நடிப்பில் முழு கவனம் செலுத்துகிறார். அதற்கு காரணம் இவர் இயக்கிய சில படங்கள் இவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. என்னை நோக்கி பாயும் தோட்டா, ஜோஸ்வா, வெந்து தணிந்தது காடு, போன்ற படங்கள் இவருக்கு பெரும் அடியாக அமைந்தது.
கௌதமேனன் நடிகர் விக்ரமை வைத்து எடுத்த துருவ நட்சத்திரம் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. அந்த படத்தின் மீது நிறைய கடன் மற்றும் பிரச்சனையை சுமத்தி ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கின்றனர். இந்த பஞ்சாயத்து சுமார்4 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு விக்ரமிடமிருந்து கூட எந்த ஒரு சப்போர்டும் அவருக்கு கிடைக்கவில்லை.
இதையும் தாண்டிகௌதம் ஏதாவது படங்கள் இயக்கினால் அந்த கடன் பாக்கி, இதற்கு இவ்வளவு காசு கொடுக்க வேண்டும் என ரிலீஸ் நேரத்தில் எரிகிற வீட்டில் புடுங்குவது போல் வந்து நிற்கிறார்கள் அதனால் இயக்குவதையே தள்ளி வைத்து விட்டார் கௌதம். தற்சமயம் இவருக்கு படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு வருகிறது. சின்ன சின்ன கேமியோ கதாபாத்திரங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்கள் நடிக்க இவரை அணுகுகிறார்கள். கௌதம் நடிப்பிலும் மிரட்டுகிறார்
இப்படி நடிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தவர் மீண்டும் தமிழ் வேண்டாம் என்று மலையாளம் நோக்கி சென்று விட்டார். மலையாளத்தில் இப்பொழுது மம்மூட்டி மற்றும் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை மீண்டும் இயக்கப் போகிறார். அந்த படத்தை மம்முட்டி தான் தயாரிக்கவும் செய்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் தாய்மொழி மலையாளம் என்பது குறிப்பிடத்தக்கது.
- கௌதம் வாசுதேவ் மேனன் நாசமாக்கிய 5 படங்கள்
- கௌதம் வாசுதேவ் மேனன் தலையில் டக்குன்னு எரிஞ்ச பல்பு
- சோறு தண்ணி இல்லாம 2 டைரக்டர் வீட்டு வாசலில் கிடந்த கௌதம் மேனன்