வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ரக்ஷனுக்கு அப்பாவாக நடித்துள்ள ஜிபி முத்துவின் வைரல் சாங்.. சாம் ஆண்டர்சனுக்கே டஃப் கொடுப்பார் போல.!

டிக் டாக்கில் மிகவும் நாராசமான வார்த்தைகள் பேசுவதற்கு பெயர் போனவர் தான் இந்த ஜி.பி. முத்து. இவர் பேசிய நார பயலே, செத்த பயலே போன்ற வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவை. அவர் என்னதான் மோசமாக பேசினாலும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் டிக்டாக்கில் உள்ளது.

ரசிகர்களின் மனதில் ஒரு பக்கம் அவர் வெறுப்புகளை சம்பாதித்தாலும் மறுபக்கம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டுதான் இருக்கிறது. டிக் டாக் தடை செய்யப்பட்ட உடன் அவர் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தார்.  மேலும் பல டிவி நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல்கள் என படு பிஸியாக உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 வில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் என்னால் செல்போன் இல்லாமல் அந்த வீட்டிற்குள் இருக்க முடியாது என்று கூறிவிட்டார்.

தற்பொழுது விஜய் டிவி பிரபலங்களுடன் இவர் ஆடிய பாடல் ஒன்று வைரலாகி வருகிறது என்ன வாழ்க்கை டா என்ற ஆல்பம் சாங் விஜய் டிவி பிரபலங்களான ரக்ஷன், சுனிதா ஆகியோருடன் ஜிபி முத்துவும் இணைந்து நடித்துள்ளார்.

டாங் லீ ஜம்போ இயக்கிய இப்பாடலுக்கு கணேசன் இசையமைத்துள்ளார் பென்னி தயால் மற்றும் வர்ஷா ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். ஜி.பி. முத்து இந்த பாடலுக்கு கருப்பு நிற உடையில் இடுப்பை ஆட்டி  அவர் ஆடிய ஆட்டம் சாம் ஆண்டர்சனுக்கே டப் கொடுக்கும் வகையில் உள்ளது.

அந்த நடனத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவர் பாலிவுட் நடிகையான சன்னி லியோனுடன் ஓ மை கோஸ்ட் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.

Trending News