வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஜிபி முத்துவை மென்டல் டார்ச்சர் செய்யும் சிலர்.. நிம்மதியா இருக்க விடுங்க என புலம்பல்

ஜி பி முத்து என்பவர் வளர்ந்தாலும் வளர்ந்தார் அவரை நிம்மதியாக இருக்க விடாமல் தினமும் சில டார்ச்சர் செய்வதாக சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் அவர் மீதான பரிதாபத்தை அதிகரித்துள்ளது.

நெகடிவ் விமர்சனங்கள் பெற்று பிரபலமானவர்கள் பலர். ஆனால் ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று பின்னாளில் அதையே தங்களுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களாக மாற்றி முன்னேறியவர்கள் வெகுசிலரே உள்ளனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவராக உள்ளார் ஜிபி முத்து. ஆரம்பத்தில் டிக்டாக் என்ற செயலி இருந்தபோது சில பெண்களுடன் சேர்ந்து கொண்டு அவர் செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால் அனைவரது பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. ஆனால் அப்போது இருந்ததெல்லாம் நெகடிவ் விமர்சனங்கள் தான்.

அதன்பிறகு அதை பாசிடிவாக மாற்றி தற்போது யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி வெகு சீக்கிரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை தொடவுள்ளார். அவரது லெட்டர் வீடியோ, பார்சல் வீடியோ ஆகியவற்றுக்கு ஏகப்பட்ட பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் ஜிபி முத்து தன்னை தேடி வரும் சின்ன சின்ன யூடியூப் சேனல்களுக்கு கூட ஆதரவு தரும்படி தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவுகளை போட்டு வந்தார். ஆனால் அதுவே அவருக்கு இப்போது விவகாரமான விஷயமாக மாறிவிட்டது. அப்படி ஆதரவு கொடுக்க சொல்லி கேட்டு தினமும் ஏகப்பட்ட பேர் வண்டி கட்டிக் கொண்டு வந்து விடுகிறார்களாம்.

அதுமட்டுமில்லாமல் விடியற்காலையிலும் வீடு புகுந்து தொந்தரவு செய்து வருவதாக சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு புலம்பி தள்ளினார் ஜிபி முத்து.

gp-muthu-cinemapettai-01
gp-muthu-cinemapettai-01

Trending News