விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌன ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரவீனா. இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமானார்.
அந்த படத்தில் நடித்த பிறகுதான் ஏகப்பட்ட மீம்ஸ் கிரியேட்டர்கள் அவரை வைத்து இணையதளத்தில் 18+ மீம்ஸ் போட்டு வந்தனர். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தார்.
தற்போது சமூக வலைதளங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து விஜய் டிவியில் முக்கிய சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சினிமா ஹீரோயின் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரவீணா தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி கலந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து உடன் சேர்ந்து ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில் ஜிபி முத்துவின் ஆஸ்தான வார்த்தையான நக்கு என்ற வார்த்தைக்கு சைகை காட்டி அவர் செய்துள்ள வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வயதுக்கு மீறி செய்த செயல் எனவும் ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.
