வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய் டிவிக்கு வரும் டிக் டாக் ஜிபி முத்து.. எந்த நிகழ்ச்சி தெரியுமா? இனி ரணகளம் தான்!

முன்னரெல்லாம் சினிமாவில் நடித்தால் மட்டுமே பிரபலமாக முடியும். அதையும் மீறி போனால் சீரியலில் நடித்து பிரபலமாகலாம். நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு கூட அந்த அளவு வரவேற்பு இருக்காது.

ஆனால் டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற செயலிகள் வந்த பிறகு தெருவுக்குத் தெரு ஒரு பிரபலத்தை பார்க்க முடிகிறது. ஆளாளுக்கு தங்களுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.

அதில் ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று தற்போது அதை அனைத்தையும் பாசிட்டிவ் விமர்சனங்களாக மாற்றி வெற்றி நடைபோட்டு வருபவர் ஜிபி முத்து. ரவுடி பேபி சூர்யாவுடன் இவர் சேர்ந்து செய்த அளபரைகள் பலராலும் கிண்டலடிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வெகுளித்தனம் தான் தன்னுடைய பிளஸ் என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி லெட்டர் படிக்கும் வீடியோ, தன்னைப் பற்றி அசிங்கமாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுப்பது, அனைவரையும் சிரிக்க வைப்பது என அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இவ்வளவு ஏன் சமீபத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் அவருடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்தது நினைவிருக்கலாம். சோலியும் குடுமியும் சும்மா ஆடாதல்லவா. விஜய் டிவி பிரபலங்கள் பேசியதற்காக விஷயம் இப்போது தான் வெளிவந்துள்ளது.

அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் ஜிபி முத்துவை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்களாம். அவருடைய பிரபலத்தை பயன்படுத்தி டிஆர்பியை ஏற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளதாம் விஜய் டிவி. விஜய் டிவிக்கு வந்துவிட்டால் ஜிபி முத்துவின் வாழ்க்கை செட்டில்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டுமா என்ன. கலக்குங்க தலைவரே!

gp-muthu-cinemapettai
gp-muthu-cinemapettai

Trending News