நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஜிபி முத்து தனது மகனை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவர் டிக் டாக் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.
ஆரம்பத்தில் ஜிபி முத்துவின் வீடியோக்களை கேலி, கிண்டல் செய்து வந்தவர்கள் அதன்பின்பு இவரது யூடியூப் சேனலுக்கு 1.24 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் வந்து ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருந்தனர். ஒவ்வொரு வீடியோக்களும் பல லட்சம் வீவ்ஸுக்கு மேல் செல்வதால் இதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டி வந்தார்.
Also Read :பணம், புகழை விட எனக்கு இதுதான் முக்கியம்…. சாப்பிடாமல் அடம் பிடித்து வெளியேறிய ஜிபி முத்து
இந்த சூழலில் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1.25 லட்சம் ஜி பி முத்து யூடியூப் மூலம் சம்பாதித்து வருகிறாராம். ஆரம்ப காலத்தில் மிகுந்த பண நெருக்கடியில் இருந்த ஜி பி முத்துக்கு யூடியூப் வாழ்வு தந்தது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 14 நாட்கள் ஜிபி முத்து பயணித்துள்ளார்.
இவருக்கு ஒரு நாளைக்கு 15,000 முதல் 18,000 வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறைந்தபட்சம் 15,000 ஒரு நாளைக்கு என்று கணக்கிட்டால் கூட 2,10,000 பிக் பாஸ் வீட்டில் ஜி பி முத்து சம்பாதித்துள்ளார். வெறும் 14 நாட்களிலேயே ஜிபி முத்து இவ்வளவு சம்பாதித்துள்ளார்.
Also Read :வீட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஜிபி முத்து.. மொத்த டிஆர்பி-யும் போயிடும் என கெஞ்சும் பிக் பாஸ்
ஜி பி முத்துவுக்கு ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவு இருந்த நிலையில் நூறாவது நாள் வரை பயணிக்கும் அளவுக்கு வாய்ப்பு இருந்தும் அதைத் தவற விட்ட உள்ளார். பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை ஜிபி முத்து பெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
மேலும் பிக் பாஸ் மூலம் இவருக்கு புதிதாக நிறைய சப்ஸ்கிரைப்ஸ் கிடைத்துள்ளனர். இதன் மூலம் அவர் நிறைய வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது. இனிமேல் தனது யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களை தொடர்ந்து ஜி.பி.முத்து என்டர்டைமென்ட் செய்து வருவார் என எதிர்பார்க்கலாம்.
Also Read :ஜி பி முத்துக்கு பதிலாக களமிறங்கும் முரட்டு போட்டியாளர்.. அட இவரு லோகேஷோட செல்ல பிள்ளை ஆச்சே