செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசு படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா.. அனல் பறக்கும் அப்டேட்டை கொடுத்த ராஜு பாய்

வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை தற்போது பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவையே தொகுத்து வழங்கும் வாய்ப்பையும் ராஜூ பெற்றிருப்பதாகவும் அவருடைய பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, பிரபு, சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் வாரிசு படம் பக்கா செண்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது.

Also Read: ரிலீசுக்கு முன்பே ஓரம் கட்டப்பட்ட துணிவு.. தில்ராஜு கொடுத்த தில்லானா பேட்டி

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கும் நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்பொழுது என்கின்ற ஹாட் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

தமன் இசை அமைத்திருக்கும் வாரிசு படத்தின் ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Also Read: உதயநிதியிடம் சரணடைந்த வாரிசு.. உச்சகட்ட டென்ஷனில் விஜய்.!

இது மட்டுமல்ல ஹைதராபாதிலும் ஒரு பெரிய விழாவிற்கு ராஜு ஏற்பாடு செய்துள்ளார். எனவே வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வாரிசு படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெறப் போவதாகவும் அந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு தொகுத்து வழங்குவதாகவும் தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.

அனல் பறக்கும் அப்டேட்டை கொடுத்த ராஜு பாய்

raju-cinemapettai
raju-cinemapettai

இதைப் பார்த்ததும் தளபதி ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். அத்துடன் சற்று முன் துணிவு படத்தின் ‘காசேதான் கடவுளடா’ பாடலும் வெளியாகி தல ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. இப்படி இரு பிரபலங்களும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு அப்டேட்டுகளை வெளியிடுவதால் ரசிகர்களும் திக்கு முக்காடி உள்ளனர்.

Also Read: பட்டையை கிளப்பிய துணிவு செகண்ட் சிங்கிள்.. எப்படி இருக்கிறது காசேதான் கடவுளடா பாடல் வீடியோ ?

Trending News