Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் ஆசைப்பட்ட மாதிரி சரவணன் உடன் சேர்ந்து ஹனிமூன் போவதற்கு பாண்டியன் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால் செந்தில் மற்றும் கதிர் எங்கேயும் போகாமல் சரவணன் மட்டும் போகிறார். இதனால் அண்ணன் தம்பிக்குள் பாகுபாடு வந்து பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது என்று பழனிச்சாமி, கோமதியிடம் புலம்புகிறார்.
உடனே கோமதி இதை இப்பொழுதே சரி செய்ய வேண்டும் என்று பாண்டியன் கடைக்கு நேரடியாக போய்விடுகிறார். அங்கே போனதும் நீங்கள் பண்ணுவது கொஞ்சம் கூட சரியில்லை. உங்களால் தான் இந்த குடும்பம் பிரியப்போகிறது. பசங்கள் சண்டை போட்டு ஒற்றுமை இல்லாமல் அலையப் போகிறார்கள். என்று ஆவேசத்தை வெளிக்காட்டும் விதமாக கோமதி கோபத்துடன் பாண்டியனிடம் சண்டை போடுகிறார்.
பாண்டியன் மாமியார் மூலம் மாட்டப்போகும் தங்கமயில்
இதை கேட்ட பாண்டியன் இதற்கெல்லாம் நான் என்ன பண்ணினேன். ஏன் என்னிடம் வந்து இப்படி பேசுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு சரவணனை மட்டும் நீங்கள் ஹனிமூன் அனுப்பி வைக்கிறீர்கள். மற்ற இரண்டு பசங்கள் என்ன சும்மாவா என்று கேட்கிறார். இப்ப நான் என்ன பண்ணனும் என்று பாண்டியன் கேட்ட நிலையில் எல்லாரையும் சேர்த்து ஹனிமூன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோமதி பிடிவாதமாக பேசுகிறார்.
உடனே வீட்டிற்கு வந்த பாண்டியன் அனைவரது முன்னாடியும் கோமதி இடம் சண்டை போடுகிறார். ஆனால் கோமதி எதற்கும் அசராமல் பாண்டியனிடம் பசங்களுக்காக எதிர்த்து நிற்கிறார். இப்படி இவர்கள் சண்டை போடுவதை வெளியிலிருந்து கோமதி அம்மா கேட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் என் மகள் எப்பொழுதும் இப்படி பேச மாட்டாள், இப்பொழுது ஏதோ ஒரு பிரச்சனை என்று மருமகள்களிடம் புலம்புகிறார்.
உடனே பழனிச்சாமிக்கு போன் பண்ணி வர வைக்கிறார்கள். அப்பொழுது பழனிசாமி விஷயத்தை சொன்னதும் கோமதி அம்மா கொஞ்சம் பீல் பண்ணி அழுகிறார். அப்பொழுது அங்கே இருந்து வந்த சக்திவேல் மற்றும் முத்துவேல் ஏன் இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாய் என்று அம்மாவிடம் கேட்கிறார். அதற்கு முத்துவேல் அம்மா என் மகள் எனக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணினாலும் அவள் மீது எனக்கு பாசம் இல்லை என்று போகாது என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் சக்திவேல் ஆத்திரப்பட்டு அப்படி என்றால் நீ இந்த வீட்டில் இருக்க தேவை இல்லை என சொல்லி அம்மாவை வெளியே பிடித்து தள்ளுகிறார். அப்பொழுது பாண்டியன் பார்த்து அதிர்ச்சியில் நிற்கிறார். அத்துடன் சத்தத்தை கேட்டதும் கோமதி வீட்டில் இருந்து அனைவரும் வெளியே வந்து பார்க்கிறார்கள். இதனை தொடர்ந்து வெளியே அனுப்பிய அம்மாவை இனி நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கோமதி சொல்வதற்கு முன் பாண்டியன் மாமியாருக்கு சப்போர்ட்டாக பேசி வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.
அந்த வகையில் கோமதி அம்மா இனி பாண்டியன் வீட்டில் தான் இருக்கப் போகிறார். தங்கமயில் மற்றும் பாக்கியம் ஆடும் ஆட்டத்தை அடக்க சரியான பாட்டியாக கோமதி அம்மா காந்திமதி ஆடு புலி ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார். இதனால் இனி ராஜி மற்றும் மீனாவிற்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது என்று சொல்வதற்கு ஏற்ப தங்கமயில் இடமிருந்து எந்தவித தொந்தரவும் வர வாய்ப்பு இல்லை.
இதனை தொடர்ந்து மீனா, கோமதி, ராஜி, பாட்டி என அனைவரும் ஒன்றாக சேர்ந்து தங்கமயிலின் உண்மையான சுயரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொண்டு வரப் போகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்
- தங்கமயில் போட்ட பிளானை ஊத்தி மூடிய கோமதி
- தங்கமயிலை மிஞ்சும் அளவிற்கு சம்பவம் செய்த பாண்டியனின் மருமகள்கள்
- அண்ணனுக்காக பாண்டியனிடம் வக்காலத்து வாங்கும் கதிர்