செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பையன ஒழுங்கா வளர்க்க துப்பில்ல, எந்த மூஞ்சிய வச்சுட்டு இவன கண்டிக்கிற.. வாங்கி கட்டிக் கொள்ளும் பாட்டி

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து பெற்ற பிறகு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி, பாக்யா குடும்பத்தை சுத்தமாகவே கண்டு கொள்வதில்லை. இருப்பினும் பாக்யா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய பிசினஸ் மற்றும் குடும்பம் இரண்டையுமே சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இளைய மகன் எழில் கைக்குழந்தையுடன் விதவையாக இருக்கும் அமிர்தாவை காதலிக்கிறார். தற்போது அமிர்தா யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தன்னுடைய அம்மா அப்பா வீட்டிற்கு சென்றதால் சோர்வுடன் இருக்கும் எழிலை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் ஏதோ பிரச்சினை என்று கண்டுபிடிக்கின்றனர்.

Also Read: என்ன பாக்யா இது குடும்பமே இரண்டா கிடக்குது.. இதுல எலக்சன்ல நின்னு என்ன கிழிக்க போற

ஏற்கனவே எழிலின் காதல் பாக்கியலட்சுமிக்கு தெரியும் என்பதால் எழிலை சமாதானப்படுத்துகிறார். ஆனால் பாட்டி எழிலின் காதல் விவகாரத்தை செழியன் மூலம் தெரிந்து கொள்கிறார். இதன் பிறகு பாட்டி எழிலிடம், ‘உனக்கும் அமிர்தாவிற்கும் இருக்கும் உறவு வெறும் நட்பு மட்டும்தான். அதைத் தாண்டி வேறு எதுவும் இருக்கக் கூடாது என என் மீது சத்தியம் செய்!’ என்று அவர் மீது தலையில் அடித்து சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.

அந்த சமயம் எழில் என்ன செய்வது என்று பாக்யாவை திருத்திரு என பார்க்கிறார். இதன்பிறகு பாக்யா, எழில்-அமிர்தாவின் காதலை வெளிப்படுத்தப் போகிறார். இதற்கு சுத்தமாகவே சம்மதம் தெரிவிக்காத பாட்டி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பி கோபியுடன் இருக்க முடிவெடுக்கப் போகிறார்.

Also Read: திருமணமாகாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கை.. 18 வயதில் வந்த கனவை நிஜமாக்கிய பிரியா பவானி சங்கர்

இப்படி ஏற்கனவே இனியா, தாத்தா இப்போது பாட்டி என தொடர்ந்து பாக்கியலட்சுமி குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் கோபியை நோக்கி செல்கின்றனர். அங்கு இருப்பது அவர்களுக்கு சந்தோஷம் இல்லை என்றாலும், எந்த இடத்தில் பாட்டியின் பேச்சு எடுபடுகிறதோ அங்கு செல்லலாம் என்ற முடிவில் பாக்யாவை உதறி விட்டு கோபியை நாடி செல்கிறார்.

அதன் பின் எழில் மற்றும் அமிர்தா இருவரின் திருமணமும் பாக்யா முன்னிலையில் சிறப்பாக நடக்கப் போகிறது. இப்படி பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து குழப்பங்கள் ஏற்பட்டு ரசிகர்களை பித்து பிடிக்க வைக்கின்றனர். அத்துடன் 50 வயதில் தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை எல்லாம் விட்டுவிட்டு கல்லூரி காதலியை திருமணம் செய்து கொண்ட மானங்கெட்ட கோபியை ஒழுங்கா வளக்க துப்பில்லை, எந்த மூஞ்சிய வச்சுட்டு பேரன கண்டிக்கிற என்று பாட்டியை நெட்டிசன்கள் விலாசுகின்றனர்.

Also Read: 4 வருட வெற்றி தொடருக்கு எண்டு கார்டு போட்ட இயக்குனர்.. டிஆர்பிக்கு இனி ஆப்பு தான்

Trending News