தற்போது தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மகனான உதயநிதி ஸ்டாலின் சினிமாவின் தயாரிப்பாளராக தளபதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்பு வரிசையாக பல படங்களில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.
இவர்களது குடும்பம் அரசியல் குடும்பம் என்பதால், அவ்வப்போது மேடை பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலினை காணமுடியும். ஆனால் கடந்த தேர்தலில் முதல் முதலாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு பெரும் வெற்றிகண்ட உதயநிதி ஸ்டாலின், தற்போது முழு நேரமாக அரசியலில் ஈடுபட தொடங்கி உள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நெரோகா கால்பந்து அணியின் ட்விட்டர் பதிவில், ‘சென்னை ட்ரையல்ஸ் கால்பந்து அணியில் இருந்து இளம் ஃடிபெண்டர், இன்பன் உதயநிதியை தேர்வு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதை அறிந்ததும், அரசியல் குடும்பத்தில் கால்பந்து வீரரா? என்று அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராம்.
அவர் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் போட்டிகளை ஆர்வத்துடன் பார்ப்பார். சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர் கருணாநிதி. ஆகையால் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் இன்பநிதி, கால்பந்து விளையாட்டில் கால்பதித்து வருகிறார்.
எனவே இன்பநிதி நடக்கவிருக்கும் இந்தியன் ஐ-லீக் கால்பந்து போட்டியில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நெரோகா கால்பந்து அணியில் சிறப்பாக விளையாட விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த தகவலானது தற்போது அரசியல் மற்றும் சினிமா ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.