செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அஜித்தை பின்பற்றும் பிரமாண்ட இயக்குனர்.. வேற எந்த ஹீரோக்கும் இப்படி செய்ய மனசு வராது.!

ஷங்கர் படத்துக்கு ஹீரோக்கு சமமான சம்பளத்தை வாங்கி வருகிறார். இவருக்கு சம்பளம் கொடுத்து ஒரு படத்தை எடுக்க இவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடைசியில் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். ஷங்கர் இரண்டு டைரக்ட் செய்து வருகிறார் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர்.

இந்தியன் டு மாதிரியே கேம் சேஞ்சர் பல வருடங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்துல ஷங்கருக்கு சம்பளம் கிடையாதாம் லாபத்துல ஷேர் அதாவது 33% சங்கர் வாங்குகிறார். ராம்சரண் 33% தயாரிப்பாளர் 34% இதுபோக ஷங்கருக்கு மாத மாதம் 50 லட்சம் வழங்க வேண்டுமாம்.

மீதி உள்ள தொகை கடைசியில் கணக்கு பார்த்து வாங்கிக்கொள்வாராம். ஷங்கரை நம்பி எப்படி இந்த மாதிரி ஒரு டீலுக்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று தெரியவில்லை.

இப்போ வரை படத்துக்கு என்ன செலவு செய்கிறோம் என்று தெரியாமலே செலவு செய்து வருகிறார் ஷங்கர். ஒரு பாடல் காட்சியை மட்டுமே 20 கோடிக்கு மேல் செலவு செய்து எடுத்து வருகிறார். இதில் எங்க லாபம் வரப்போகிறது.

அஜித்தை பின்பற்றும் சங்கர்

இதேபோல் அஜித் குமாரும் தயாரிப்பாளருக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்று மொத்த சம்பளத்தையும் கொடுத்தால் கூட வாங்க மாட்டாராம். மாதம் அக்கவுண்ட்ல 5 கோடி போட வேண்டுமா.

மீதி உள்ளதை படம் முடியும்போது எவ்வளவு இருக்கிறது அதை வாங்கி கொள்வாராம். இது மாதிரி எந்த ஹீரோவும் செய்ய மாட்டார்கள் மொத்த பணத்தையும் வாங்கி கொண்டு தான் செல்வார்கள்.

அதேபோல் இயக்குனர்களில் யாரும் இது மாதிரி மாத சம்பளமாக வாங்க மாட்டார் சங்கர் வாங்குவது பாராட்டு கூறியது. இதனால் தயாரிப்பதற்கான பாரம் குறையும்.முன்பு வரை ஷங்கர் இப்படி வாங்க மாட்டார்.

இது மாதிரி மாத சம்பளமாக வாங்குவதால் இதற்கு அஜித் ஒரு உதாரணமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது மாதிரியே அனைத்து பெரிய நடிகர்களும், பெரிய இயக்குனர்களும் வாங்கிக் கொண்டால் தயாரிபளருக்கு பண பிரச்சினை அதிகம் வராது.

Trending News