மாஸ்டர் ஹீரோயினுக்கும், வேறு சிலருக்கும் கிடைத்த பெரிய ஏமாற்றம்- இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமானது நேற்று ரிலீஸாகி ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த படத்தில் விஜய், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமான், கௌரி கிஷன் என பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது.

இந்நிலையில் கதாநாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனுக்கு மாஸ்டர் படம் பெரும் ஏமாற்றத்தையே தந்தது. ஏனென்றால் ஒரு பெரும் ஹீரோ படத்தில் நடித்தால், கதாநாயகியின் பாத்திரம் நன்கு எழுதப்படாமல் இருப்பது சகஜம்தான்.

சில நேரங்களில் திரையில் வந்து செல்லும் நேரமும் குறைவாகத்தான் கிடைக்கும். இந்த பிரச்சனைதான் மாளவிகா மோகனுக்கும் நேர்ந்துள்ளது.

malavika-mohanan-master
malavika-mohanan-master

ஏனென்றால் மாஸ்டர் படத்தில் கதாநாயகிக்கான எந்த காட்சியும் சிறப்பாக அமையவில்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் மாளவிகா மோகன் இருந்த, குறைந்தபட்ச காட்சிகளில் கதாநாயகியின் தனிப்பட்ட திறமை வெளிப்படாமல் மந்தமாகவே இருந்தது.

அதுமட்டுமில்லாமல் படத்தில் எக்கச்சக்கமான நடிகர், நடிகைகள் இடம் பெற்றதால் அவர்களுடைய கதாபாத்திரம் எதுவும் ஆத்மார்த்தமாக பதியவில்லை. ஒரு சிலரே மனதில் பதிந்தனர். உதாரணத்திற்கு ரம்யா, பாடகி சவுந்தர்யா, VJ தாரா என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இது போன்ற சிறிய மனவருத்தம் காரணமாக தான் ஆண்ட்ரியா பட ப்ரோமோஷன் என எதிலும் கலந்து கொள்ளவில்லை என்கின்றனர் கோலிவுட் பட்சிகள்.

Advertisement Amazon Prime Banner