சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.. கொண்டாடும் திரையுலகம்!

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையும், தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், நேற்று முன்தினம் தான் தன்னுடைய 36 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.

இந்நிலையில் தமிழக அரசு சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதை அறிவித்துள்ளது. மேலும் சீனியர் நடிகர்களான சௌகார் ஜானகி, சரோஜாதேவி, பாடகி ஜமுனா ராணிக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் டி. இமான், தேவதர்ஷினி, மதுமிதா, சங்கீதா, நந்தகுமார், டிவி நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ், நித்யா, இயக்குநர்கள் லியாகத் அலி கான், மனோஜ்குமார், இசையமைப்பாளர் தினா,

டான்ஸ் மாஸ்டர்கள் சிவசங்கர்,ஸ்ரீதர், ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது.

kalaimamani-award-cinemapettai

பொதுவாக நடனம், நாட்டியம், இசை, திரைப்படம், சின்னத்திரை, கிராமிய கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருதை தமிழக அரசு வழங்குவது வழக்கம். எனவே தற்போது இந்த ஆண்டிற்கான கலைமாமணி விருதை பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு திரை உலகையே மகிழ்ச்சியில் ஆயிரத்தி உள்ளது.

ஆகையால் இந்த வருடம் கலைமாமணி விருதை பெறும் சினிமா பிரபலங்களை அவர்களுடைய ரசிகர்கள் சமூக வலை தளங்களின் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை குவிக்கின்றனர்.

Trending News