Tamil Cinema: 80களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் இரண்டு ஜாம்பவான்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன். இவர்கள் இருவரின் படங்களுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டு சின்ன சின்ன ஹீரோக்களின் படங்களை வச்சு செய்கின்றனர்.
சினிமாவில் சமீப காலமாக ஒரு மோசமான கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் தான் இந்த கலாச்சாரம் மேலோங்கி இருந்தது. இது மெல்ல மெல்ல இப்பொழுது தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
Also Read: விஷால் செய்த மட்டமான வேலையால் 3 டாப் ஹீரோக்களுக்கு ரெட் கார்டு.. காசு, பணமுனு அலைஞ்சா இப்படித்தான்!
இப்பொழுது வெளிவரும் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாமே ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளும் வன்முறைகளும் நிறைந்ததாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த கமலின் விக்ரம், சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் போன்ற படங்களில் இதை காணலாம்.
அது மட்டும் இன்றி படத்தை தணிக்கை செய்யும் சென்சார் போர்டும் ரஜினி, கமல் போன்ற ஹீரோக்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்களுக்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் U சான்றிதழ் கொடுக்கின்றனர். சிம்பு, சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, விஷால் போன்ற ஹீரோக்கள் படங்களில் இந்த மாதிரி ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்கு A சர்டிபிகேட் தான் கொடுப்போம் எனஓரவஞ்சகம் காட்டுகின்றனர்.
Also Read: விஜய்க்கு அடுத்த பட கதை சொன்ன அட்லீ.. ஆகா, இது அந்த படமல என உஷாரான தளபதி
இந்த செயல் சின்ன சின்ன ஹீரோக்களின் தயாரிப்பாளர்களுக்கு தான் பெரிய ஆப்பாக மாறுகிறது. ரஜினி, கமல் போன்ற ஹீரோக்களுக்கு ஒரு நியாயம், சின்ன ஹீரோக்களுக்கு ஒரு நியாயம் என்று பாரபட்சம் பார்க்கிறது சென்சார் போர்டு.
அதுவும் சமீப காலமாக இந்த விஷயம் ரசிகர்களுக்கும் கண்கூடாகவே தெரியவந்துள்ளது. இதைப் பற்றி அவர்களும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்புவதால் இனி வரும் நாட்களிலாவது இந்த நிலைமை மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.