தனுஷ் தற்போது குபேர படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அந்த படத்தின் Patch Work பணிகள் நடந்துவருகிறது. இந்த பணிகள் அனைத்தும் அன்னபூர்ணா Studio-வில் தான் நடக்கிறது. இப்படி பட்ட சூழ்நிலையில், குபேரா படத்தின் கதை லீக் ஆகியுள்ளது.
இதுவரை நாம் பார்த்திராத வித்தியாசமான கதையாக குபேரா படம் இருக்கும் என்று தான் தோன்றுகிறது. அதுவும் தனுஷ் கேரியரில் அதிக பொருட்ச்செலவில் உருவான ஒரு படமாகவும் உள்ளது. 100 கோடிக்கு மேல் செலவாகியிருக்கும் நிலையில், படம் நிச்சயம் தரமான ஒரு கதையம்சத்துடன் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
குபேரா படத்தின் கதை
இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக இருப்பார். நாகார்ஜூனா மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார். நாகர்ஜூனாவிடம் இருக்கும் பணம், ராஷ்மிகா வாயிலாக தனுஷுக்கு கிடைக்கிறது. அந்த பணம் தனுஷுக்கும் ஏற்படுத்தும் மாற்றங்கள், ஆசை படுத்தும் பாடு, பேராசையினால் வரும் பிரச்சனைகள் அனைத்தும் படத்தின் கதையாக இருக்கும்.
கிட்டத்தட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அருணாச்சலம் படம் போல என்றும் கூறலாம். அதே கதை இல்லையென்றாலும் அதே பாணியில் உருவாகி வருகிறது. இந்த படம் நிச்சயமாக தனுஷுக்கு தெலுங்கு இண்டஸ்ட்ரிலயில் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுக்கும்.
இந்த படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் இது தான் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையென்றாலும், படத்தின் கதை தனுஷ் திடீர் பணக்காரன் ஆவது தான்.