வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கின்னஸில் இடம் பிடித்த 3 தமிழ் படங்கள்.. 2 மணி நேரப் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து சாதனை.!

தமிழ் சினிமாவில் கின்னஸ் சாதனை படைத்த படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம். கதையில் வித்தியாசம் வைப்பது போன்று திறமையான இயக்குனர்கள் ஏதாவது சாதித்துவிட வேண்டும் என்பதற்காக கின்னஸ்  சாதனைக்கு முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.

சுயம்வரம்: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், சுந்தர் சி, பி வாசு இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் சுயம்வரம். தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற படம் சுயம்வரம். இப்படம் 23 மணி நேரம், 58 நிமிடங்களில், 14 கதாநாயகர்கள், 12 கதாநாயகிகள் நடித்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும். இதில் 14 இயக்குனர்கள் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் தேவா, வித்யாசாகர், ராஜ்குமார், சிற்பி ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

guinness-movies-1
guinness-movies-1

சுயம்வரம் படம் 1999இல் ஏப்ரல் ஐந்தாம் தேதி காலை 7 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி மறுநாள் காலை 6.58 மணி வரை இப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. இப்படத்தில் விஜயகுமார், மஞ்சுளா இவர்களது 9 பிள்ளைகளுக்கும் ஒரே நாளில் சுயம்பரம் பார்த்து, ஒரே நாளில் திருமணம் நடத்தப்படும். இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். சுயம்வரம் படம் ஒரே நாளில் எடுக்கப்பட்டதால் இப்படம் கின்னஸ் சாதனை படைத்தது.

சிகப்பு மழை: சுரேஷ் ஜோக்கிம் தயாரிப்பில், கிருஷ்ணன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிகப்பு மழை. இப்படத்தில் சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், சோனு, விவேக், சுமன், போஸ் வெங்கட் என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இப்படம் 11 நாட்கள் 23 மணி நேரம் 45 நிமிடங்களில் தயாரிக்கப்பட்ட கின்னஸ் சாதனை படைத்தது. இப்படத்தில் கனேடியத் தமிழர் சுரேஷ் ஜோக்கிம் தயாரித்து, நடித்து இருந்தார். இப்படம் உலக சாதனை படைத்து இருந்தாலும், இப்படம் வெற்றி பெறவில்லை.

அகடம்: லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில், முகமது இசாக் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அகடம். இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா, ஸ்ரீனி ஐயர், தமிழ் என பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு பாஸ்கர் இசையமைத்திருந்தார். இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதால் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது. ஒரு முறையில் தொடர்ச்சியாக 2 மணி 3 நிமிடங்கள் 30 வினாடிகளில் எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு பாஸ்கர் இசையமைத்திருந்தார்.

Trending News