ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வாயில் துப்பாக்கி குண்டுகளுடன் மருத்துவமனையில் ஜெமினி கணேசன்.. மறைக்கப்பட்ட மர்மம்

ஜெமினி கணேசன் அந்த காலத்திலேயே காதல் மன்னன் என்று பெயரெடுத்தவர். பெயருக்கு தகுந்தாற்போல் இவருக்கு நான்கு மனைவிகள். மருத்துவராக வேண்டும் என கனவுகளோடு வாழ்ந்த இவர், தந்தையின் இறப்புக்குப் பின்னர் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவர்.

பின்பு சினிமாவின் மீது கொண்ட காதலால் நடிப்பு துறைக்கு வந்தார். ஆரம்பத்தில் சிறு, சிறு வேடங்களில் நடித்தாலும் அதன் பின்னர் சினிமாவில் தனக்கென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்தார். அவ்வை சண்முகி, மேட்டுக்குடி, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களின் மூலம் இன்றளவும் மக்கள் மனதில் நிற்கும் ஜெமினி கணேசன் வாழ்க்கையில் நிறைய வெற்றி, தோல்விகளை சந்தித்து உள்ளார்.

ஜெமினி கணேசன் ஒருமுறை வாயில் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அபாய கட்டத்தில் இருந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

ஜெமினிகணேசன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் எனது மகனுடன் சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருக்கும்போது, துப்பாக்கியை எடுத்து சுத்தம் செய்தேன், அது தவறுதலாக மூன்று முறை சுட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார்.

அந்த துப்பாக்கி தோட்டாக்களில் ஒன்று வீட்டின் மேல் பாய்ந்ததாகவும், மற்றொன்று ஜன்னலில் பாய்ந்ததாகவும் , மூன்றாவது தோட்டா தன் வாயில் பாய்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த தவறு முந்தைய நாள் தான் அதிக அளவில் மது அருந்தியதாகவும். அந்த மயக்கத்தில் ஏற்பட்ட விளைவுதான் இது, என்றும் கூறியுள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு தன் மனைவி ஓடி வந்ததாகவும், அவர் தான் மருத்துவமனையில் தன்னை சேர்த்ததாகவும், மற்றபடி இது கொலை அல்லது தற்கொலை முயற்சியோ இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Trending News