வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பித்து பிடித்த குணா, ஒரே படத்தோடு காணாமல் போன அபிராமி.. ஜோதிகா, நக்மாவின் உறவா.?

Gunaa Movie Heroine: 32 வருடங்களுக்கு முன்பு அபிராமி அபிராமி என குணா பித்து பிடித்து அலைந்தார். இத்தனை வருடங்கள் கழித்து தற்போது நெட்டிசன்கள் அவரை சோசியல் மீடியாவில் வலை வீசி தேடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் வைப்ரேஷன் தான்.

குணா படத்தை மையமாக வைத்து வெளியான இப்படம் தற்போது 100 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. அதை தொடர்ந்து குணா குகையும் சுற்றுலா பயணிகளால் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க அந்த படத்தில் நடித்த அபிராமியை பலரும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் அந்த கேரக்டரில் நடித்த ரோஷினி இந்தப் படத்தோடு சினிமாவை விட்டு காணாமல் போனார். தற்போது அவர் எப்படி இருப்பார்? எங்கிருக்கிறார்? என்ற ஆர்வம் தான் அனைவருக்கும் இருக்கிறது. அதேபோல் இவர் நக்மா, ஜோதிகாவின் சகோதரி ரோஷினி தான் என்ற தகவலும் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: 7 நாட்களில் இத்தனை கோடியா?. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட்

கார்த்திக்கின் சிஷ்யா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். அவரை தான் குணா படத்தின் அபிராமி என சிலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த ரோஷினி பணக்கார குடும்பத்து பெண்.

கமலின் முன்னாள் மனைவி சரிகா தான் இவரை குணா படத்தில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார். அந்த படத்தை முடித்த கையோடு ரோஷினியின் வீட்டில் இந்த சினிமாவெல்லாம் நமக்கு சரிவராது என்று கூறியிருக்கின்றனர். அதனாலேயே அவர் மொத்தமாக லைம் லைட்டிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இருந்தாலும் தற்போது அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் துடித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அதனாலேயே இப்போது மீடியாக்கள் அவரை தேடும் படலத்தில் இறங்கி இருக்கின்றனர். எப்படியும் இன்னும் சில தினங்களில் குணாவின் காதலி ஊடகங்களுக்கு தரிசனம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: மஞ்சுமல் பாய்ஸ்ஸ விடுங்க குணா படமே ஹாலிவுட் காப்பி தான்..! கமலை வறுத்தெடுக்கும் பிரபலம்

Trending News