புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜான்சி ராணி, குணசேகரனின் மாஸ்டர் பிளான்.. சூழ்ச்சி வலையில் சிக்குவாரா அப்பத்தா?

ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் மட்டுமே. எந்த மாதிரியான கதையை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் எப்படி வெற்றி அடையும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்து, அந்த ரூட்டையே பின்பற்றுகின்ற ஒரே இயக்குனர் திருசெல்வம் அவர்கள்.

கொஞ்ச நாளாவே ட்ராக் ஒரே மாதிரியாக போயிட்டு  இருக்கு.  அதாவது அந்த 40% ஷேர் மற்றும் ஆதிரை திருமணம் தான். இது இரண்டுக்கும் பிரச்சினையாக இருப்பது ஆதி குணசேகரன் மட்டும். ஆதிரை ஒரு மேஜரான பொண்ணு அவர் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் மட்டும்தான் முடிவு எடுக்க முடியும். இதை அங்கு படித்த அப்பத்தா மற்றும் ஜனனி வெளிப்படையாக சொல்லிவிட்டாலே பாதி பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

Also read: விட்டா ட்ரோனை வேட்டி குள்ள விற்றுவாங்க.. எதிர்நீச்சல் குணசேகரன் ஃபேமஸ் 5 கெத்தான சீன் டயலாக்

ஆனால் அதை விட்டு போட்டு மனசாட்சி என்றால் என்னவென்று தெரியாத குணசேகரனிடம் போய் நியாயத்தை எதிர்பார்ப்பது எப்படி சாத்தியமாகும். அதுக்கு தான் அவர் தங்கச்சி கல்யாணத்தை வைத்து வியாபாரம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆதிரை நினைத்தபடி கல்யாணம் நடக்கணும் என்றால் அந்த 40% ஷேர் வேணும் என்று கேட்ட குணசேகரனுக்கு, அப்பத்தா கூறும் பதில் என்னவாக இருக்கும்.

இதற்கு இடையில் குணசேகரன், ஜான்சி ராணியை வைத்து ஏதோ ஒரு திட்டம் போடுவதற்கு தயாராகி விட்டார். ஆனால் இங்க நம்ம அப்பத்தாவும் அந்த ஷேர் எதுவும் கொடுக்க முடியாது என்று சொல்லி குணசேகரன் மூஞ்சியில் கரியை பூச போகிறார். அத்துடன் இந்த சொத்து விஷயத்தில் நந்தினியும், ரேணுகாவும் நடந்து கொள்வதை பார்த்தால் கொஞ்சம் எரிச்சல் உண்டாகிறது. அப்பத்தாவின் நோக்கமே இந்த வீட்டின் மருமகள்கள் சுயமா இருக்கணும் என்பது தான்.

Also read: எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

ஆனால் அது புரியாமல் அப்பத்தாவை தவறாக நினைத்துக் கொண்டு இந்த மாதிரி பேசுறது சற்றும் எதிர்பார்க்காதது. மேலும் ஜனனி புதுசாக ஒரு பிசினஸ் பண்றதுக்கு யோசிக்கும் போது அதற்கு சக்தி உறுதுணையாக இருப்பது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அடுத்தபடியாக குணசேகரன், அப்பத்தாவிடம் என்ன முடிவு பண்ணி வைத்திருக்கிறாய் என்று கேட்கிறார்.

அதற்கு அப்பத்தாவும் முடிவு எடுத்து விட்டேன் என்று கூறுகிறார். இதைக் கேட்ட அழுமூஞ்சி ரேணுகா புலம்ப ஆரம்பித்துவிட்டார். ஆனால் அப்பத்தா ஏதோ ஒரு மாஸ்டர் பிளான் போட்டு குணசேகரனுக்கு ஆப்பு வைக்கப் போகிறார் என்பது தெரிகிறது. இதில் அப்பத்தாவின் பிளான் ஜெயிக்குமா அல்லது குணசேகரன், ஜான்சி ராணி கூட சேர்ந்துகிட்டு சொத்துக்காக போடும் சூழ்ச்சி வலையில் அப்பத்தா சிக்குவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: தேங்காய் மண்டையனை போட்டுத் தள்ள துடிக்கும் சவுண்ட் சரோஜா.. அப்பத்தா, எஸ்கேஆர் க்கும் வலை விரித்த குணசேகரன்

Trending News