புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சாரு பாலாவை ரூட்டு விடும்போது மட்டும் இனிச்சுதோ.. பொண்டாட்டிய பொண்ணு கேட்டதால் கதறிய குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், எந்த ஒரு ரகசியம் குணசேகரனுக்கு தெரியக்கூடாதோ அது தற்போது ஈஸ்வரியின் அப்பா மூலமாகவே தெரிந்து விட்டது. இதை கேட்டதும் குணசேகரன் தலையில் இடியை இறக்கினது போல் மொத்தமாக இடிஞ்சு போய் வாசலில் உட்கார்ந்து விட்டார்.

இதற்கு இடையில் வீட்டில் நடந்த கலவரத்தை ரேணுகா, ஈஸ்வரியிடம் சொல்லி அதற்கு ஏற்ற மாதிரி தயாராகி வாருங்கள் என்று சொல்லிவிடுகிறார். பிறகு ஈஸ்வரி வீட்டிற்குள் வந்ததும் குணசேகரன் அவருடைய கெட்ட புத்தியில் வார்த்தையாலே ஈஸ்வரியை காயப்படுத்துகிறார். ஆனால் தற்போது எது வந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற துணிஞ்சு விட்டார் ஈஸ்வரி.

Also read: மகள் வாழ்க்கையை சூனியம் ஆக்கிய முட்டாள் அப்பா.. மனம் விட்டு பேசிய ஈஸ்வரி ஜீவானந்தம்

அதனால் குணசேகரனை பார்த்து பயப்படாமல் தைரியமாக சமாளிப்பதற்கு தயாராகி விட்டார். அதாவது ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரிக்கு நடுவில் ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று தெரிந்ததால் அவரை வைத்து சந்தேகப் பேரொளியாக பேச ஆரம்பித்து விடுகிறார். அந்த வகையில் ஜீவானந்தம் தான் உன்னிடம் இந்த மாதிரி இரு என்று சொல்லி அனுப்பி வைத்தாரா என்று விஷப்பாம்பு போல் வார்த்தையை கொட்டுகிறார்.

அதற்கு ஒத்து ஊதும் விதமாக கதிர், ஆமா ஆமா சொல்லி இருப்பார் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி, ஏ கதிர் மரியாதையாய் பேசு என்று கோபத்தின் மொத்த உருவமாய் மாறுகிறார். இப்படி துணிச்சலாக எல்லாத்தையும் எதிர்த்து பேசும் ஈஸ்வரியை தான் இத்தனை நாளாக எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் ஆனந்தமாக இந்த காட்சியை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: குணசேகரன் தலையில் இடியை இறக்கிய ஈஸ்வரியின் அப்பா.. மனுஷன் சொத்து போனதுக்கு கூட இந்த அளவுக்கு கலங்கலையே

அத்துடன் குணசேகரன், மகள் மகனிடமும் இங்க நடக்கிற கூத்தெல்லாம் பார்த்துகிட்டு தானே இருக்க என்று அவர்களையும் வம்புக்கு இழுத்து ஈஸ்வரி மானத்தை டேமேஜ் செய்ய நினைக்கிறார். ஆனால் குணசேகரனுடைய குழந்தைகள் தற்போது இவருக்கு எதிராக திரும்பி விட்டது என்பதை மறந்து விட்டாரோ என்னமோ. உடனே ஈஸ்வரி, புருசனை பார்த்து நீயெல்லாம் ஒரு மனுஷனா என்று கேட்க அதற்கு ஏ என்று ஆணவத்துடன் கொந்தளிக்கிறார் குணசேகரன்.

அதாவது இவர் மட்டும் கல்யாணத்துக்கு முன்னாடி சாருபாலாவை ரூட்டு விட்டது மட்டுமில்லாமல், இப்போது வரை பார்க்கிற இடம் எல்லாம் டாவடிப்பாராம். ஆனால் இவர் பொண்டாட்டியை கல்லூரி பருவத்தில் பொண்ணு கேட்டு வந்ததற்கு வலிக்குதா. இப்ப மட்டும் குத்துதே குடையுதே என்று கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். நீ செஞ்ச பாவம் எல்லாம் திரும்பி அடிக்கும் என்பதற்கு ஏற்ப குணசேகரன் செய்த அட்டூழியம் அனைத்தும் கர்மா வழியாக அனுபவிக்க தொடங்கி விட்டார்.

Also read: குணசேகரனை புரட்டி எடுக்க பக்கா பிளான் போடும் ஜீவானந்தம்.. தம்பியை கைகழுவி விட்ட பரிதாபம்

Trending News