திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

புருசன் பொண்டாட்டிக்குள் பிரச்சனையை உருவாக்கும் குணசேகரன்.. பலியாடாக சிக்கப் போகும் ஜனனி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது பல மாதங்களுக்குப் பின் மறுபடியும் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. முக்கியமாக நேற்றைய எபிசோடில் ஆதிரை பேசின ஒவ்வொரு டயலாக்கும் குடும்பத்திற்காக திருமண வாழ்க்கையில் சிக்கி சீரழியும் பெண்களின் கண்ணீர் குரலாக தான் இருந்தது. அந்த வகையில் இனி இந்த கயருக்கு அர்த்தமே இல்லை என்று தூக்கி எறிந்து விட்டார்.

இதை பொறுக்க முடியாத ஜான்சி ஆதிரை மேல் கை வைக்க, நீ எப்படி எங்க வீட்டு பெண்ணை அடிப்பே என்று ஈஸ்வரி பதிலுக்கு கன்னத்தில் பளார் என்று அடித்து விட்டார். அதோடு விடாமல் ரேணுகா, நந்தினியும் மாத்தி மாத்தி ஜான்சியை ரவுண்டு கட்டி விட்டார்கள். அத்துடன் தரதரவென்று இழுத்துட்டு போய் வெளியே தள்ளி சிம்மக்கல் ராணியை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க.

இதனால் கொந்தளித்து போய் கத்திக் கொண்டிருக்கிறார் ஜான்சி. அதன் பின் குணசேகரனை விசாரிப்பதற்காக போலீசார் கேள்வி கேட்க, பூனையை மடில கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக, கரிகாலனை பக்கத்திலேயே வைத்தது டேஞ்சர் ஆகிவிட்டது. வெகுளித்தனமாக இருக்கிறேன் என்கிற நினைப்பில் முட்டாள்தனமாக வாய்க்கு வந்த அனைத்தையும் போலீசார் முன்னாடி உளறி விடுகிறார்.

Also read: கதையே இல்லாமல் உருட்டும் எதிர்நீச்சல் சீரியல்.. ஹனிமூன் மாதிரி ஜெயிலுக்கு போகும் குணசேகரன்

இருந்தாலும் இவர்களிடம் வாக்குமூலத்தை வாங்கிய பிறகு போலீசார் இவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். வீட்டுக்கு வந்து குணசேகரன், சக்தி மற்றும் ஜனனியை வீட்டை விட்டு அனுப்புவார் என்று எதிர்பார்த்தால் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கதிர் இவர்களை வெளியே போக சொல்ல, அதற்கு குணசேகரன் சக்தி உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வீட்டுக்குள்ள வா கூப்பிட்டு விட்டார்.

அதாவது குணசேகரன் போட்ட கணக்கு என்னவென்றால் இவர்களை வெளியே விட்டுவிட்டால் நமக்கு பின்னாடி இருந்து ஏதாவது சதி வேலையை செய்து பெரிய வம்பில் இழுத்து விட்டுவிடுவார்கள் என்ற ஒரு பயம் வந்துவிட்டது. அதனால் வீட்டிற்குள் வைத்தே குணசேகரன் பெண்களுக்கு எதிராக ஒரு சூழ்ச்சி வலையை போடப் போகிறார். இதில் முதல் பலிகடாக சிக்கப்போவது ஜனனியாகத்தான் இருக்கப் போகிறார்.

அதாவது ஜனனிக்கு தற்போது மிக பக்க பலமாக இருப்பது சக்தி. அதனால் இவர்களுக்குள் ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்துவிட்டு பிரித்து விட்டோம் என்றால் அதுவே ஜனனியின் ஆட்டத்திற்கு முடிவாகும் என்று குணசேகரன் தப்பு கணக்கு போடுகிறார். ஆனால் சக்தி இனிமேல் எந்த காரணத்தை கொண்டும் யாரிடமும் ஜனனியை விட்டுக் கொடுப்பதாக இல்லை என்று ஒரு நல்ல கணவனாக சப்போர்ட் செய்து வருகிறார். அந்த வகையில் போகப் போக இன்னும் இந்த நாடகம் பழைய மாதிரி சுவாரசியமாக இருக்கப் போகிறது.

Also read: அப்பத்தா இறந்ததால் எதிர்நீச்சல் போட போகும் மருமகள்கள்.. சீக்ரட்டாக காய் நகர்த்தும் ஜீவானந்தம்

Trending News