புதன்கிழமை, ஜனவரி 15, 2025

40% சொத்துக்காக குரங்கு போல் குட்டிக்கரணம் போடும் குணசேகரன்.. சீக்ரெட் ஆக ப்ளான் பண்ணும் ஜனனி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் அனைத்து நாடகங்களுக்கும் சிம்ம சொப்பனமாக மக்கள் மனதில் இருந்து வருகிறது. அந்த வகையில் பெண்களின் அடிமைத்தனத்தை வேரோடு அறுக்க வேண்டும் என்பதற்காக இந்த நாடகத்தின் கதை முன்னிறுத்தி வருகிறது. ஆரம்பத்தில் வறட்டு கௌரமாக பெண்களை அடக்கி வந்த குணசேகரன் தற்போது சொத்துக்காக ஒவ்வொரு நாளும் குரங்கு போல் குட்டிக்கரணம் அடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவரால் ஒன்னும் பண்ண முடியவில்லை என்பதால், இவர் வீட்டில் இருக்கும் பெண்களை வைத்து அப்பத்தாவிடம் பேசுவதற்கு தூது அனுப்பி இருக்கிறார். அவர்களும் அப்பத்தாவின் நிலைமை என்னவென்று தெரிந்து கொள்வதற்காக ஜீவானந்தத்தை சந்திக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

Also read: உளறித் தள்ளிய முரட்டு வில்லன் வசமாக சிக்கும் வேட்டை நாய்.. குணசேகரன் கூண்டோட கைலாசம் செல்லும் நேரம் வந்துடுச்சு

அத்துடன் குணசேகரன் மற்றும் கதிர் செய்த பாவத்தின் வெளிப்பாடாக நந்தினி மற்றும் ஈஸ்வரி ரொம்பவே குற்ற உணர்ச்சியில் தவித்து வருகிறார்கள். இனிமேல் கொலைகாரனின் மனைவி என்ற முத்திரையுடன் தான் இருக்க வேண்டும். இந்த பாவம் என்னுடைய குழந்தைகளுக்கும் வந்து சேரும் என்று பயத்தில் புலம்பி தவிக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயத்தை ஜீவானந்தத்திடம் சொல்லி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை வாங்கி கொடுக்கணும் என்று நந்தினி கூறுகிறார். ஆனால் ஜனனி எந்த அவசரமான முடிவையும் இப்பொழுது எடுக்க வேண்டாம். ஒருவேளை ஜீவானந்தத்திற்கு தெரிந்தால் அவர் கண்டிப்பாக குணசேகரன் மற்றும் கதிரை சும்மா விட மாட்டார்.

Also read: புகழ் போதையில் விஜய்யின் அப்பாவை மட்டம் தட்டி பேசிய குணசேகரன்.. மண்டையில் ஒரு கொட்டு வைத்து அறிவுரை கூறிய விவாகரத்து நடிகர்

இவர் ஏதாவது பண்ண போக கடைசியில் அம்மாவை இழந்த குழந்தை அப்பாவையும் இழந்து தனியாக இருக்கிற மாதிரி வந்து விடும். அதனால் இந்த விஷயத்தை கொஞ்சம் பொறுமையாக டீல் பண்ணிக்கலாம் என்று நந்தினியை சமாதானப்படுத்துகிறார். அத்துடன் ஜனனி அப்பத்தாவை வெறும் 40% சொத்துக்காக மட்டும் பார்க்க போகலை.

இவர் மனதில் வேறொரு திட்டத்தை வைத்துக்கொண்டு அதை செயல்படுத்தவே ஜனனி தற்போது முயற்சி எடுக்கிறார். அந்த வகையில் ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக ஈஸ்வரி, பர்கானாவிடம் கெஞ்சுகிறார். அவரும் ஜீவானந்தம் இருக்கும் இடத்தை சொல்லி சந்திக்க வர சொல்கிறார். இவர்கள் அனைவரும் ஜீவானந்தத்தை சந்தித்து குணசேகரனுக்கு எதிராக பிளான் பண்ண போகிறார்கள்.

Also read: அப்பத்தாவை ரூமில் அடைத்து கொடுமைப்படுத்தும் குணசேகரன்.. ஜீவானந்தத்திற்கு ஆதரவாக நிற்கும் மருமகள்

Trending News