புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இவ மானங்கெட்ட கேள்வி கேட்டாலும் கோபமே வர மாட்டேங்குது.. குணசேகரன் பம்மும் ஒரே ஆன்ட்டி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஆணாதிக்கத்தை அடியோடு பிடுங்குற மாதிரி கதையை முன் வைத்து வருகிறது. இந்த காலத்திலும் இப்படி ஒரு கேரக்டர் இருக்கிறதா என்று யோசிக்கும் வகையில் குணசேகரனின் கேரக்டர் இருக்கிறது. இது இவரோடு மட்டுமில்லாமல் இவர் கொடுக்கும் தைரியத்தால் கதிரும் இப்பொழுது இவரை மிஞ்சும் அளவிற்கு அட்டூழியம் செய்து வருகிறார்.

இதற்கிடையில் எஸ் கே ஆர் இன் தம்பி அரசு, அருணை காணவில்லை என்பதால் குணசேகரன் தான் ஏதாவது பண்ணியிருக்கணும் என்று கோபத்தில் சாறுபலா அண்ணியிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி விடுகிறார். அந்த நேரத்தில் குணசேகரன் மற்றும் ஈஸ்வரியின் அப்பா மண்டபம் விஷயமாக பேசிவிட்டு வெளியே வந்த நிலையில் இவரைப் பார்த்த சாறுபலா குணசேகரனை பார்த்து வண்டி வண்டியாக கழுவி ஊற்றுகிறார்.

Also read: பாக்யாவை அலைக்கழிக்கும் ராதிகா.. கடைசியில் கிடைத்த மிகப்பெரிய ஆப்பு

எல்லாத்துக்கும் ஏ என்று வரிஞ்சு கட்டிட்டு வரும் குணசேகரன் சாருபாலா பேசுவதை வேடிக்கை பார்த்து பொட்டி பாம்பாக அடங்கி விட்டார். அதுல வேற இவள் என்ன தான் நம்மள மானங்கெட்ட கேள்வி கேட்டாலும் கோபமே வர மாட்டேங்குது. இவள் என்ன சொல்லுகிறாள் ஒன்னும் புரியல ஆனா பேசுறத மட்டும் ரசிக்க தோணுது என்று ஜொள்ளு விடுகிறார். இவர் மனசுக்குள்ளும் ஒரு அழகான காதல் கதை ஓடி இருக்கிறது என்று புரிகிறது.

அடுத்ததாக குணசேகரன் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் சும்மா இல்லாமல் குணசேகரன் உடைய சொந்தக்காரர்கள் என்று நிரூபிக்கும் வகையில் அந்த வீட்டு மருமகளை சீண்டிப் பார்க்கிறார்கள். ஆனால் எப்பொழுதும் ஊம குசும்பாக இருக்கும் ஈஸ்வரி இன்று பொங்கி எழுந்து விட்டார் என்றே சொல்லலாம். அவர் மனதிற்குள் பூட்டி வைத்த மொத்த பாரத்தையும் குணசேகரன் மற்றும் குடும்பத்தில் இருக்கும் அனைவர் முன்னாடியும் கொட்டி தீர்த்து விட்டார்.

Also read: குணசேகரனை ஏமாற்றும் ஜனனியின் புதிய திட்டம்.. கதிரின் அடாவடித்தனத்துக்கு சரியான பதிலடி

இதை பார்க்கும் பொழுது நமக்கு இருந்த பாரமே குறைந்தது போல் தோன்றியது. எது எப்படியோ குணசேகரனுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். அடுத்தபடியாக ஜான்சி ராணி குலதெய்வம் கோயிலுக்கு சென்ற  ஜனனி மற்றும் நந்தினி திரும்பி வரும் வரை அருண், கதிர் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று மிகவும் பதற்றத்துடன் இருக்கிறார்கள். அதனால் இந்த விஷயத்தை எப்படியாவது அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள் ஆனால் முடியாமல் போய்விடுகிறது.

அடுத்து பூஜை ஆரம்பிப்பதற்கு கரிகாலன் பக்கத்தில் ஆதிரையை உட்கார சொல்கிறார்கள். இதற்கு மாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஆதிரையே வலுக்கட்டாயமாக கதிர் செய்ய சொல்கிறான். இதை பார்த்த ஜனனி ஆவேசமாக பொங்கி எழுந்து நிறுத்துங்கள் என்று சொல்லி விடுகிறார். ஆனால் இதில்  ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது கரிகாலனின் நண்பராக கோவிலுக்குள் வந்திருக்கும் ஒருவர் ஏற்கனவே அருண் கௌதம் பேசிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் அவரே அறியாமல் வீடியோவை எடுத்து விடுகிறார். இது ஒன்றும் சாதாரணமாக நடந்த விஷயமாக இருக்காது. இங்கு தான் ஒரு ட்விஸ்ட் இருக்கப்போகிறது இந்த வீடியோவை கரிகாலன் அல்லது கதிர் பார்த்து பிரச்சனை வெடிக்க போகிறது.

Also read: கோபியின் வயிற்றெரிச்சலும் பொறாமையும்.. பாக்கியா பழனிச்சாமியின் தரமான சம்பவம்

Trending News