செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி

சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி குடும்பத்துடன் பார்க்க வைக்கக்கூடிய ஒரே சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த தொடரில் குணசேகரன் ரொம்பவே அடாவடித்தனமாக அப்பத்தாவின் சொத்தை தந்திரமாக பிளான் பண்ணி பிடுங்கிவிட்டார் என்றே சொல்லலாம். ஆனாலும் எந்த காரணத்துக்காகவும் இந்த சொத்து குணசேகரன் கையில் போகக்கூடாது என்று தீர்மானமாக இருந்த அப்பத்தாவுக்கு இது மிகப்பெரிய மன வருத்தத்தை கொடுத்ததால் அவருடைய நிலைமை தற்போது சுய நினைவு இன்றி மருத்துவமனையில் இருக்கும்படி ஆகிவிட்டது.

இதை தெரிந்து கொண்ட குணசேகரன் அப்பத்தாவை பார்க்க வருகிறார். ஆனால் ஜனனி இவரை அப்பத்தாவிடம் நெருங்க விடக்கூடாது என்பதற்காக ரொம்பவே தைரியமாக குணசேகரனுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் விதமாக சண்டை போடுகிறார். பிறகு ஆடிட்டர், குணசேகரனை தனியாக கூப்பிட்டு இதுதான் நல்ல சான்ஸ் இதை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அதாவது அப்பத்தா சுயநினைவு இல்லாதபோது அவரை தன் வசப்படுத்திக் கொண்டு அவரிடம் இருந்து தேவையான கைரேகை வாங்கிக் கொண்டு ரிஜிஸ்ட்ரேஷனை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்று ஐடியா கொடுக்கிறார்.

Also read: ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல்.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்

இதனால் குணசேகரனும் சரியாக காய் நகர்த்துகிறார். டாக்டரிடம் சென்று அப்பத்தாவை நான் வேறு இடத்துக்கு மாற்றிக் கூட்டிப் போகிறேன் என்று சொல்கிறார். ஆனால் ஜனனி அதெல்லாம் முடியாது அப்பத்தாவை எங்கேயும் கொண்டு போக முடியாது இங்க நான் பாத்துக்குறேன் என்று கூறுகிறார். அதற்கு குணசேகரன் அவளிடம் நயா பைசா கூட கிடையாது. எந்த ஒரு செலவாக இருந்தாலும் நான் தான் கொடுக்க வேண்டும் என்று டாக்டரையை யோசிக்க வைக்கிற அளவுக்கு குணசேகரன் பேசுகிறார்.

நாளைக்கு காலையில வந்து என் அப்பத்தாவை நான் கூட்டிட்டு போகிறேன் என்று சொல்லி கிளம்பி விட்டார். ஆனால் ஜனனி கண்டிப்பாக அப்பத்தாவை குணசேகரனிடம் அனுப்பி வைக்க மாட்டார் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஜனனிக்கு சப்போர்ட்டாக சக்தி இப்போது வரை இருக்கிறார். இதே மாதிரி கடைசிவரை ஜனனிக்கு ஆதரவாக இருந்தால் நன்றாக இருக்கும். அத்துடன் குணசேகரன் போட்ட திட்டத்தை அறிந்து கொண்டால் ஜனனி.

Also read: ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் குணசேகரன்.. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அப்பத்தா

இதைப்பற்றி ஈஸ்வரிடம் உங்கள் கணவர், அப்பத்தா ஆதிரை மற்றும் எஸ்கேஆர் குடும்பத்தை அனைவரையும் ஏமாற்றப் போகிறார். அவர் நினைத்தபடி சொத்தை வாங்கின பிறகு வேறு ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலையை பார்க்கப் போகிறார். இதை சரியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார். இதற்காகவாவது அப்பத்தா கூடிய சீக்கிரத்தில் கண்விழித்து குணசேகரனுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.

இதற்கிடையில் ஜனனிடம் அப்பத்தா சொன்ன அந்த ஜீவானந்தம் யார் என்று கண்டுபிடித்து குணசேகரன் எதிர்பார்க்கும் விஷயத்தை தவிடு பொடியாக்கி அவரை செல்லாக்காசாக ஆக்கப் போகிறார். அடுத்ததாக இப்பொழுது ஜனனி துணிச்சலாக குணசேகரனை எதிர்த்து பேசுற மாதிரி மத்த மருமகளும் ஊமையாக இல்லாமல் எதிர்த்து நின்றால் குணசேகரனுக்கு இனிமேல் எல்லாமே தோல்விதான். அதுவும் கூடிய சீக்கிரத்தில் மக்கள் எதிர்பார்த்தபடியே நடக்க இருக்கிறது.

Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்

Trending News