வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

15 வருடமாக கை கொடுக்காத சினிமா, அல்லோலப்பட்ட குணசேகரன்.. ரூட்டை மாற்றி தூக்கி விட்ட இயக்குனர்

Director Marimuthu: தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை நிரூபிக்க வேண்டும் என, இயக்குனர் மாரிமுத்து 2008ல் ஆசையாசையாய் இயக்கிய கண்ணும் கண்ணும் என்ற படம் படு தோல்வியை சந்தித்தது. அதன்பின் இயக்கிய புலிவால் படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை.

சுமார் 15 வருடத்திற்கு மேல் இயக்குனராக வேலை செய்தும் கஷ்டப்பட்டு படம் எடுத்தும் சினிமா வாழ்க்கை மாரிமுத்துவிற்கு கை கொடுக்கவில்லை. உதவி இயக்குனராக மீண்டும் பல இயக்குனர்களுடன் வேலை செய்து வந்தார் மாரிமுத்து இப்படியே வாழ்க்கை செல்கிறது என்ன செய்யப் போகிறோம் என்ற வருத்தத்தில் இருந்தார்.

Also Read: எஸ்ஜே சூர்யா மாதிரி இந்த 7 இயக்குனர்களிடம் வேலை பார்த்த மாரிமுத்து.. படம் எடுத்து வாழ்க்கை தொலைத்த கொடுமை

அவ்வப்போது அடிக்கடி மிஸ்கினை பார்க்கும் மாரிமுத்து, திடீரென ஒரு நாள் ஒரு படம் எடுக்கிறேன் அதில் நீ நடி என்று கூறி இருக்கிறார். எனக்கு நடிப்பு வராது என சொல்லியிருக்கிறார் மாரிமுத்து. அதெல்லாம் நான் பார்த்துகிறேன் நீ நடி என சொல்லி நடிக்க வைத்த படம் யுத்தம் செய்.

அதிலிருந்து மாரிமுத்துவின் நடிப்பு பயணம் தொடங்கியது. இவ்வாறு இயக்குனராக சாதிக்க வேண்டும் என துடி துடித்த மாரிமுத்துவுக்கு இருந்த நடிப்பு திறமையை அவருக்கே காண்பித்து அவருடைய ரூட்டை மாற்றி விட்டிருக்கிறார் இயக்குனர். அது மட்டுமல்ல யுத்தம் செய் படத்திற்கு பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி கொண்டு இருக்கிறார்.

Also Read: விஜய்யுடன் நடிக்க மறுத்த 3 ஹீரோக்கள்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

படங்களில் மட்டுமல்ல சீரியல்களிலும் மாரிமுத்துவின் மார்க்கெட் எகிறி விட்டது அதிலும் டிஆர்பி-யின் அடித்து நொறுக்கி கொண்டிருக்கும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கேரக்டரில் மாரிமுத்துவின் நக்கல் நையாண்டி அல்டிமேட் ஆக இருக்கிறது. இவருக்காகவே இந்த சீரியலை நிறைய பேர் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

அதிலும் இவர் சொல்கிற ‘யம்மா ஏய்!’ என்ற டயலாக்கை கெத்தாக பேசி மிரட்டி விடுகிறார். இவர் இன்று அவர் மிகப்பெரிய சிறந்த நடிகராக மாறிவிட்டார் இயக்குனர் ஆவதை மறந்துவிட்டார். அந்த அளவிற்கு பணம் அவருக்கு கொட்டுகிறது. இதற்கு காரணம் மிஸ்கின் மட்டும்தான். ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய மாரிமுத்து தற்போது இரண்டு கோடி வரை சம்பாதித்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read: எதிர்நீச்சல் டிஆர்பியை காலி பண்ண வரும் சூப்பர் ஹிட் சீரியல்.. சிஷ்யனுக்கு குருவே வைக்க போகும் ஆப்பு

Trending News