ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஆதிராவின் செயலால் தலைகுனிந்த குணசேகரன்.. எதிர்நீச்சலில் நடக்கப் போகும் ட்விஸ்ட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல சுவாரசியமான திருப்பங்கள் எதிர்பாராத அளவிற்கு அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. இப்பொழுது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் பேராதருடன் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. தற்பொழுது குணசேகரன் ஆதிராவால் பெரும் பூகம்பம்மே வெடித்துள்ளது.

குணசேகரன் குடும்பத்தில் பெண்களுக்கு என்று தனி மரியாதை என்பது இருந்ததே கிடையாது. ஆனால் குணசேகரன் தனது அம்மா மற்றும் தங்கைக்கு மட்டுமே சுதந்திரமாக பேசுவதற்கும் வாழ்க்கைக்கு தேவையானதை செய்வதற்கு உரிமையை வழங்கியுள்ளார். இருப்பினும் ஆதிரா அதை எல்லாம் ஓவர் அட்வான்டேஜ் ஆக எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள மற்ற பெண்கள் அனைவரையும் அண்ணனுடன் சேர்ந்து மட்டம் தட்டிக் கொண்டே இருந்தார். 

Also Read: டிஆர்பி-யில் விஜய் டிவிக்கு தண்ணி காட்டும் சன் டிவி.. கிளைமாக்ஸ் காட்சியை வைத்து முன்னேறிய பாரதிகண்ணம்மா

இதனைத் தொடர்ந்து அண்ணிகள் என்றும் கூட பாராமல் அவர்களுக்கு எதிராக அண்ணன்களிடம் கோள் மூட்டி சண்டையில் அவர்களை இழுத்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனாலேயே இவர் ஒரு வில்லியாகவே மாறிவிட்டார் போல என்று அனைவருக்கும் தோன்றுகிறது. கரிகாலனுக்கு குணசேகரன் தன் மகளை திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். 

ஆனால் அதிலிருந்து தவறியதால் தனது தங்கை ஆதிராவை மணமுடித்து தருவதாக வாக்களித்து இருந்தார். இந்நிலையில் ஆதிரா எஸ்.கே.ஆர் இன் தம்பி என்றும் கூட தெரியாமல் இடையில் உதவி செய்வதற்காக அவரை காதலிக்க தொடங்கி விட்டார். இவற்றையெல்லாம் கரிகாலன் ஆதிராவுக்கே தெரியாமல் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். ஆதிராவிடம் குணசேகரனும் அவரது தம்பிகளும் யார் அவன் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தனர். உடனே கரிகாலன் வாங்க எல்லாரும் எஸ் கே ஆர் வீட்டுக்கு சம்பந்தம் பேச போலாம் என்று பெரிய குண்டை தூக்கி போடுகிறார்.

Also Read: முதல் முறையாக சன் டிவி டிஆர்பி-யை அடித்து நொறுக்கி விஜய் டிவி.. அனல் பறக்கும் டாப் 10 சீரியல்கள்

இதனை ஆதாரத்துடன் குணசேகரன் குடும்பத்தில் உள்ள அனைவரிடத்திலும் கொடுத்து ஆதிராவின் கொட்டத்திற்கும் திமிருதனத்திற்கும் ஒரு முடிவினை கட்டியுள்ளார். குணசேகரனும் அவரது தம்பிகளும் உச்சகட்ட கோபத்தில் உள்ள நிலையில் கரிகாலன் சொன்ன அனைத்தையும் ஆதாரத்துடன் பார்த்ததால் கொந்தளித்து போய் உள்ளனர். ஞானமும் கதிரும் எஸ் கே ஆர் இன் வீட்டிற்கு சென்று பயங்கர ரகளையில் ஈடுபடுகின்றனர்.

தற்பொழுது குணசேகரன் குடும்பத்திற்கும் எஸ் கே ஆர் இன் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக பெரும் பகை இருந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் ஆதிரா எஸ் கே ஆர் இன் தம்பி என்றும் கூட தெரியாமல் அவர் செய்த உதவிக்காக அவரின் நல்ல குணத்தினை கொண்டு அவரிடம் காதலில் மயங்கி விட்டார். ஆனால் தற்பொழுது இவை ஆதிராவுக்கே எதிராக திரும்பி உள்ளது. ஆதிராவால் குடும்பத்திற்குள் இன்னும் என்னவெல்லாம் பூகம்பம் வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

Trending News