புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் குணசேகரன்.. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அப்பத்தா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் பல பிரச்சனைகளுக்கு நடுவில் ஆதிரையின் நிச்சயதார்த்தம் அவர் எதிர்பார்த்தபடியே நன்றாகவே நடந்தது. குணசேகரன் ஆசைப்பட்ட மாதிரி அப்பத்தாவின் 40% சொத்தை வாங்கி விட்டோம் என்ற மமதையில் இருக்கிறார். ஆனால் அப்பத்தா தன்னுடைய ஆயுதமாக வச்சிருந்த சொத்தை இப்படி கேடுகெட்ட குணசேகரனுக்கு எழுதிக் கொடுத்து விட்டோமே என்று சோகத்தில் இருக்கிறார்.

பின்பு அப்பத்தா மண்டபத்தை விட்டு தனியாக போய்விட்டார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஜனனி மற்றும் சக்தி அப்பத்தாவை தேடி அலைகிறார்கள். பின்பு ரோட்டில் கூட்டமாக இருப்பதை கண்ட ஜனனி அங்கே சென்று பார்க்கிறார். அங்கே மயக்கத்தில் கீழே விழுந்திருக்கும் அப்பத்தாவை பார்த்து உங்களுக்கு என்ன ஆச்சு அப்பத்தா கண் திறந்து பாருங்கள் என்று சொல்கிறார்.

Also read: நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்

உடனே சக்தி ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி வர வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆம்புலன்ஸில் போகும் போது ஜனனி, அப்பத்தாவை பார்த்து உங்களுக்கு ஒன்னும் ஆகாது எழுந்திரிங்க எழுந்திரிங்க என்று கதறுகிறார். அதன் பின் மருத்துவமனையில் அட்மிட் ஆன பிறகு டாக்டர், ஜனனிடம் கொஞ்சம் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்தால் தான் தெரியும் என்று கூறுகிறார்.

இதை கேட்ட ஜனனி, சக்தியிடம் அப்பத்தா ரொம்ப பாவம் அவர்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என்று கேட்கிறார். பின்பு இவருடைய இந்த நிலைமைக்கு காரணமான அந்த ஆள நான் சும்மா விட மாட்டேன் என்று ஆவேசமாக பேசுகிறார். ஆனால் இப்ப பேசுகிற ஜனனி இதற்கு முன்னாடி நடந்த அநியாயத்தின் போது ஏதாவது செய்திருந்தால் இந்த நிலைமைக்கு யாரும் ஆளாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

Also read: சீரியலில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் 2வது திருமணம்.. பாக்கியலட்சுமி பிரபலம் செய்த மானங்கெட்ட விவாகரத்து

மறுபக்கம் ஆதிரை நிச்சயதார்த்தம் முடித்த சந்தோசத்தில் இருக்கிறார். பின்பு குணசேகரன் வீட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கும் பொழுது விசாலாட்சி அப்பத்தா மண்டபத்தில் இருந்து ஆள காணும் எங்க போயிட்டாங்க. கொஞ்சம் எல்லாரும் போய் தேடிப் பாருங்கள் என்று கூறுகிறார். அதற்கு குணசேகரன், அப்பத்தா ஒன்னும் சின்ன பிள்ளை கிடையாது போனா வருவாங்க என்று திமிராக சொல்கிறார்.

ஆக மொத்தத்தில் குணசேகரன் நினைத்தபடி அவருக்கு சொத்து வந்ததால் பெரிய மமதையில் இருக்கிறார். அதே மாதிரி ஆதரையும் ஆசைப்பட்ட மாதிரி நிச்சயதார்த்தம் நடந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இப்படி அவர்களை மட்டுமே யோசித்து சுயமாக இருக்கும் இவர்களுக்கு மத்தியில் அப்பத்தா அந்த வீட்டு மருமகளுக்காக சப்போர்ட்டாக இருந்தது கிரேட் தான்.

என்னதான் அப்பத்தா சொத்து குணசேகரனுக்கு எழுதிக் கொடுத்திருந்தாலும் இதற்குப் பின்னாடி அப்பத்தா ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பார். அது கண்டிப்பாக குணசேகரனுக்கு பெரிய அடியாகத்தான் இருக்கும். ஆனாலும் அப்பத்தாவின் சொத்து இல்லாமல் அந்த வீட்டின் மருமகள் சுயமாக தன் காலில் நின்று ஜெயித்து காட்டுவார்கள்.

Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்

Trending News