புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முதலைக் கண்ணீர் வடித்து ஏமாற்றும் மகா நடிகன்.. குணசேகரன் பொண்டாட்டியை பொண்ணு கேட்டு போன வில்லன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் நாளுக்கு நாள் ஒவ்வொரு திருப்பங்களாக கதை அமைந்து வருகிறது. குணசேகரன் பக்கவாக பக்கவாதம் வந்தது போல் இவருடைய நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். ஜீவானந்தத்தை காலி பண்ணுவதற்கு பிளான் பண்ணிய பிறகு வீட்டுக்கு வருகிறார். அங்கே குணசேகரனின் கையைப் பற்றி அனைவரும் விசாரிக்கிறார்கள்.

அதற்கெல்லாம் அசராமல் செண்டிமெண்ட் ட்ராமாவை போட்டு அனைவரையும் நம்ப வைத்து விடுகிறார். இதில் கரிகாலன் மட்டும் புத்திசாலித்தனமாக குணசேகரனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு இவ்வளவு நேரம் ஆகாதே, உங்களுக்கு மட்டும் ஏன் இங்க இருக்க கோயம்புத்தூருக்கு போயிட்டு வருவதற்கு ரொம்ப நேரமா ஆகியிருக்கிறது என்று கேட்கிறார்.

Also read: பாக்கியலட்சுமி கதையை கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. நந்தினிக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட்

இதையெல்லாம் குணசேகரன் சமாளித்து விடுகிறார். பிறகு ரேணுகா பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்க கிளம்பும்போது ஞானம் அவரைப் போக விடாமல் தடுக்க முயற்சிக்கிறார். இவர்கள் அனைவரிடமும் ரேணுகா சமாளித்து பார்க்கிறார் ஆனால் முடியவில்லை. கடைசியில் ஜனனி வந்து இவர்களை காப்பாற்றி அனைவரும் பள்ளிக்கூடத்திற்கு போய்விடுகிறார்கள்.

அங்கே ரேணுகா பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கிறார். இதை பார்த்து ஜனனி மற்றும் நந்தினி சந்தோஷத்தில் பூரித்துக் போயிருக்கிறார்கள். பிறகு குணசேகரன் வழக்கம்போல் அவருடைய முதலைக்கண்ணீரை வடித்து ஞானத்தை முட்டாளாக்குகிறார். அவரும் அண்ணனை மலை போல் நம்பி குணசேகரன் பக்கத்திலேயே இருக்கிறார்.

Also read: மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்

அடுத்து கரிகாலன் இவர்கள் அனைவருக்கும் டீ போட்டுக் கொடுக்கிறார். அப்பொழுது ஆண்களுக்கு பக்கவாதம் இடது கையில் தான் வரும், உங்களுக்கு மட்டும் எப்படி வலது கையில் வந்திருக்கிறது என்று கேள்வி கேட்கிறார். இவர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குணசேகரன் திக்கு முக்காடிவிட்டார்.

இதனை அடுத்து குணசேகரனை கலாய்ப்பதும் அவரை அசிங்கப்படுத்துவதுமாக இருந்த நந்தினியை, மிஞ்சும் அளவிற்கு கரிகாலன் குணசேகரனை அவ்வப்போது முட்டாள் பையன் என்று சொல்லி பங்கப்படுத்துகிறார். அடுத்ததாக நந்தினிக்கு, ஜனனி கேட்டரிங் ஆர்டர் வாங்கி கொடுக்கிறார். மேலும் சொத்து விஷயமாக ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரி சந்திக்கும் தருணம் நெருங்கி விட்டது. இந்த ஜீவானந்தம் தான் சிறு வயதில் ஈஸ்வரியின் அப்பாவிடம் பொண்ணு கேட்டு போனவர்.

Also read: இனிமே ஒத்த கை குணசேகரன் தான் கூப்பிடுவாங்க.. எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல்

Trending News