சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

குணசேகரனை நாக்க புடுங்குற மாதிரி கேள்விக் கேட்ட ஆதிரை.. அடிமைகள் செய்த காரியத்தால் அரண்டு போன அண்ணன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினியை கண்டுபிடிக்க போன நந்தினி, ஈஸ்வரி, ஜனனி மற்றும் ரேணுகா அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு தர்ஷினி இடத்துக்கு போனோம் ஆனால் அவளை அங்கே காணவில்லை. அதற்கு பதிலாக அவள் கைப்பட எழுதின ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது என்று போலீஸிடம் கொடுக்கிறார்கள்.

உடனே போலீஸ் அங்க போய் விசாரித்ததில் இவர்கள் சொன்னது அனைத்தும் உண்மை என்பது மாதிரி நிரூபணம் ஆகிவிட்டது. அடுத்தபடியாக போலீஸ், குணசேகரனுக்கு போன் பண்ணி எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனில் தான் இருக்கிறார்கள் என்று சொன்னதும் உடனே அவர் நானும் அங்கே வருகிறேன் என்று கிளம்பி போய்விடுகிறார். போனதும் ஜீவானந்தத்தை பார்த்து எல்லா பிரச்சனைக்கும் இவன்தான் காரணம்.

என் வீட்டுப் பெண்களை இவனுக்கு சாதகமாக பயன்படுத்தி என்னுடைய மொத்த சொத்தையும் அபகரிக்க பிளான் பண்ணுகிறான் என்று வாய்க்கு வந்தபடி ஜீவானந்தத்தை குணசேகரன் பழி சொல்லுகிறார். இதைக் கேட்டு பொறுக்க முடியாத ஈஸ்வரி நிறுத்துங்கள் என்று குணசேகரனின் வாயை அடக்குகிறார். அத்துடன் ஜீவானந்தத்தின் மனைவி இறப்பிற்கு நீங்கள் தான் காரணம் என்கிற உண்மையையும் ஜனனி சொல்கிறார்.

Also read: மறுபடியும் மீனாவிற்கு தாலி கட்டி கலாட்டா பண்ணும் முத்து.. தூக்கத்தில் உளறி கொட்டிய மனோஜ்

இதை கேட்டு வாயடைத்து போய் நிற்கிறார் குணசேகரன். இதற்கிடையில் குணசேகரனிடம், ஆதிரை எங்க எல்லாரையும் பாசத்தால் கட்டி போட்டு உன்னுடைய காரியத்தை சாதித்து விட்டாய். நாங்கள் இப்படி அடிமையாக இருந்ததற்கு காரணம் நீதான் என்று ஒவ்வொரு பாயிண்டாக குணசேகரனுக்கு எதிராக பேசி நாக்க புடுங்க மாதிரி கேள்வியை கேட்டு விட்டார்.

அத்துடன் குணசேகரன் மொத்த கோபத்தையும் ஆதிரை மீது காட்டும் விதமாக அடிக்க கை ஓங்குகிறார். இத்தனை நாளாக அடிமையாக இருந்த கதிர் முதல் முதலாக அண்ணனை எதிர்த்து தங்கைக்கு சப்போர்ட்டாக நின்று விட்டார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத குணசேகரன் அப்படியே அரண்டு போய் வாயெடுத்து போய்விட்டார்.

மேலும் இருக்க கோபத்தை எல்லாம் ஜான்சி ராணியிடம் காட்டும் விதமாக நான் திரும்பி வரும்பொழுது நீயும் உன் மகனும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது வீட்டை விட்டு வெளியே போயிருக்க வேண்டும் என்று கூறிவிட்டார். ஆக மொத்தத்தில் ஜான்சி ராணியின் சாப்டர் க்ளோஸ் ஆகப்போகுது. இதற்கிடையில் தர்ஷினி எங்கே போனார் யார் கூட இருக்கிறார் என்பது ஒரு புரியாத புதிராகவே வருகிறது. ஆனாலும் இந்த முறை தர்ஷினி அந்த கும்பலிடம் சிக்க வாய்ப்பு இல்லை.

Also read: 18 வருடங்களுக்குப் பின் இரண்டாம் பாகமாக வரும் சீரியல்.. டிஆர்பி-யை பிடிக்க சன் டிவி ஆடப்போகும் ஆட்டம்

Trending News