திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஷ செடியாக இருக்கும் குணசேகரன் கதிர்.. கொட்டத்தை அடக்கும் ஜனனியின் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரொம்பவே செண்டிமெண்டாக போய்க்கொண்டு இருக்கிறது. அதிலும் கதிர் செய்யும் அட்டூழியத்தை யாரும் தட்டிக் கேட்காமல் ஓவராகவே ஆட்டம் போடுகிறார். ரேணுகாவை பேசியது தப்புதான் என்று தன் மனைவிக்காக நியாயம் கேட்கும் ஞானத்துக்கு கடைசியில் அவமானம் தான் மிச்சம். இதற்குப் பிறகாவது ஞானத்துக்கு புத்தி தெளிந்திடுமா என்று பார்க்கலாம்.

நந்தினிக்கு என்னதான் பிடிக்காத கணவராக இருந்தாலும் எல்லாரையும் இந்த அளவுக்கு அவமானப்படுத்துவது தனக்கு மிகப்பெரிய கேவலம் என்று கூனிக்குறுகி தலைகுனிந்து நிற்கிறார். அதனால் கதிர் செய்த தவறுக்கு நான் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுகிறேன் என்று ஞானம் மற்றும் ரேணுகாவிடம் சொல்கிறார். இதை பார்த்த கதிர் மறுபடியும் நந்தினி இடம் பிரச்சனை பண்ணி ஞானத்திடம் வம்பு இழுக்கிறார்.

Also read: சுவாரசியம் குறையும் எதிர்நீச்சல்.. குணசேகரன் காணாமல் போனதற்கு இதுதான் காரணம்

இதற்கிடையில் நம் கண் முன்னாடியே பெத்த பிள்ளைகள் இப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று மனவேதனையில் குணசேகரனின் அம்மா கதறுகிறார். இப்பதான் அப்பத்தா சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது விஷச் செடி என்று நினைத்தே தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டுட்ட இனி அதை கட் பண்றது ரொம்பவே கஷ்டம் என்றார். அதேபோலத்தான் குணசேகரன் தப்பு பண்ணும் போதெல்லாம் கூடவே இருந்துவிட்டு இப்பொழுது வலிக்குது என்று சொன்னால் என்ன பண்ண முடியும்.

அடுத்ததாக கௌதமை நன்றாக புரிந்து கொண்ட சக்தி, பண்ணின தப்புகள் எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுவிட்டு இருவரும் நண்பர்களாக மாறிவிட்டார்கள். தற்போது இவர் பொறுப்பில் அருணை ஒப்படைத்துவிட்டு சக்தி வீட்டுக்கு வருகிறார். பிறகு குணசேகரன் இப்போது எல்லாம் அடிக்கடி எபிசோடுகளில் பார்ப்பது ரொம்பவே அபூர்வமாக இருக்கிறது. அதற்கு ஒரு காரணத்துடன் கல்யாண வேலையாக வெளியே போயிட்டு வந்தேன் என்று சொல்லி பூசி மழுப்புகிறார்.

Also read: குணசேகரனின் ட்ரிக்கே ஃபாலோ செய்யும் ஜனனி.. விறுவிறுப்பான ட்விஸ்ட்டுடன் சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

இதனை அடுத்து குணசேகரன் வீட்டிற்கு ஜான்சி ராணி குடும்பத்துடன் வந்து கோவிலுக்கு போகணும் என்று சொல்ல உடனே குணசேகரன் சரி என்று சொல்கிறார். ஆனால் ஜான்சி ராணி மருமகளையும் கோவிலுக்கு கூட்டிட்டு போகணும் என்று சொல்கிறார். இதற்கிடையில் குணசேகரன், ஜனனி ஓசி சோறு சாப்பிடுவதாக குத்தி காட்டுகிறார். அதற்கு ஜனனி இங்கே யாரும் ஓசி சோறு சாப்பிடல என்று பதிலடி கொடுக்கிறார்.

உடனே குணசேகரன் இந்த ஆட்டம் எல்லாம் கல்யாணம் முடிகிற வரை தான் அதுக்கப்புறம் நான் என்னுடைய கச்சேரியை வைத்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் இவருக்கு தெரியாது இந்த கல்யாணமே உனக்கு ஆட்டம் காண்பிக்கப் போகுது என்று. இதற்கு ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து குணசேகருக்கு எதிராக காய் நகர்த்துகிறார்கள். தற்போது வருகிற எபிசோடில் குணசேகரனை விட கதிரிடம் தான் ஒட்டுமொத்த கோபமும் திரும்புகிறது. அந்த அளவிற்கு கதிர் அட்டூழியத்தின் மொத்த உருவமாக இருக்கிறார்.

Also read: குணசேகரனுக்கு எதிராக எதிர்நீச்சல் போட தயாராகும் ஜனனி.. ஏமாறப்போகும் ஜான்சிராணி

Trending News