திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வில்லத்தனத்தையும் தாண்டி அழுது சிரிக்க வைத்த குணசேகரன்.. கொஞ்சம் கூட அசராமல் அடிக்கும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், மன்னர் பரம்பரை மானங்கெட்ட பரம்பரை என்று இதுவரை பெனாத்திக் கொண்டிருந்த குணசேகரனுக்கு சரியான ஆப்பை வைத்து விட்டார் ஜீவானந்தம். ஒரு துப்பாக்கி சத்தத்திற்கு இந்தளவுக்கு ஒரு மனுஷனால பயப்பட முடியும் என்றால் அவர் வில்லன் இல்லை காமெடியன். அது போல தான் தற்போது குணசேகரன் நிலைமை இருக்கிறது.

ஆனால் இது அத்தனையும் அந்த வீட்டில் இருக்கும் பெண்களை நம்ப வைத்து செண்டிமெண்டாக தாக்கி அவர்களை வைத்து ஜீவானந்தத்திற்கு குரல் கொடுக்க வைப்பது தான். குணசேகரனால் ஒன்னும் பண்ண முடியாது என்று அவருக்கு நல்லாவே தெரிந்து போய்விட்டது. அத்துடன் போலீஸ் கேஸ் என்று போனாலும் கதைக்கு ஆகாது.

Also read: ஜீவானந்தத்தின் வீக்னஸ் பாயிண்ட்டை குறி வைக்கும் குணசேகரன்.. தலைவன் கதறி அழும்போது குமுறி சிரித்த மருமகள்கள்

அதனால் வேறு வழியில்லாமல் பெண்களை பகடைக்காயாக யூஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு நேரமும் இவருடைய நாடகத்தை அரங்கேற்றுகிறார். ஏற்கனவே குணசேகரன் கண்ணீர் மல்க பேசியதில் ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி மனதில் கொஞ்சம் இறக்கப்பட ஆரம்பித்து விட்டார்கள். அதன் பிறகு இரவு நேரத்தில் தூங்கும்போது கனவில் துப்பாக்கி சத்தம் கேட்டு அலறி பயத்தில் புலம்புகிறார்.

இதை பார்த்த நமக்கு வாய் விட்டு சிரித்து என்ஜாய் பண்ற அளவுக்கு சிரிப்பாக இருந்தது. இவரால் இப்படியும் நடிக்க முடியுமா என்று யோசிக்கிற அளவுக்கு பெர்பாமன்ஸ் தூள் கிளப்பி விட்டார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இவருடைய ட்ராமாவை ஆரம்பித்து அந்த வீட்டில் இருக்கும் பெண்களின் மனதில் விதை போட ஆரம்பித்து விட்டார்.

Also read: மொத்தத்தையும் உருவி விட்ட ஜீவானந்தம்.. மானம் மரியாதையை இழந்து தள்ளாடும் குணசேகரன்

அதற்கு ஏற்ற மாதிரி தற்போது ஆடிட்டர் மறுபடியும் ஒரு சொத்து நம்மை விட்டு போகப் போகுது என்று கூறுகிறார். இதைக் கேட்ட குணசேகரன் நெஞ்சுவலியால் துடித்து ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டார். இது புரியாமல் அங்கு இருப்பவர்கள் அனைவரும் பதறிக்கொண்டு குணசேகரனை தூக்கிக் கொண்டு போகிறார்கள். இந்த வாரம் முழுவதும் குணசேகரனை தூக்கிக் கொண்டு போகிற வாரமாக தான் இருக்கும் போல.

அடுத்ததாக இவருடைய நடிப்பில் ஏமாந்து, ஜனனி மற்றும் மற்ற பெண்கள் ஜீவானந்தத்திற்கு எதிராக குரல் கொடுக்கப் போகிறார்கள். கண்டிப்பாக இனிமேல் இந்த பெண்களுக்கும் ஜீவானந்தம் உள்ள போராட்டமாக மாறப்போகிறது. இவர்களுக்கு பின்னாடி இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது குணசேகரன். இந்த போராட்டத்தில் யார் ஜெயிக்கிறார்கள், தர்மம் யார் பக்கம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Also read: பிழைப்புக்காக எதிர்நீச்சல் சீரியலை அண்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. இறுதிக்கட்டத்தால் எடுத்த முடிவு

Trending News