செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

படப்பிடிப்பு தளத்தில் நடிகருடன் குணசேகரனுக்கு ஏற்பட்ட வாக்குவாதம்.. திடீரென விலகிய மாரிமுத்து

Ethir Neechal Gunasekaran: சின்னத்திரை டிஆர்பி ரேட்டிங்கை அடித்து நொறுக்கி கொண்டிருக்கும் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நக்கல் நையாண்டியுடன் நடித்துக் கொண்டிருப்பவர் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து. ‘கண்ணும் கண்ணும்’ படத்தின் இயக்குனராக அறிமுகமான இவர் புலிவால் என்ற படத்தில் இயக்குனரோடு துணை நடிகராகவும் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

இவருடைய 24 வருடங்களாக தமிழ் சினிமாபயணத்தில், எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் நடிகருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் திடீரென்று அந்த படத்திலிருந்து விலகியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை மொத்தமாக பின்னுக்கு தள்ளிய சன் டிவி

கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு இரட்டை வேடத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்த படம் தான் மன்மதன். இந்த படம் 365 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெற்றி பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ஏகே முருகன் படத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக மாரிமுத்துவிடம் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கிறார்.

உடனே மாரிமுத்துவும் நட்பு ரீதியாக அந்த படத்திற்கு தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பு பணியிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்திருக்கிறது. அதன்பின் தயாரிப்பாளர் ஏகே கிருஷ்ணகாந்தை வைத்து இந்த படத்தை ஒரு வழியாக முடித்து விட்டனர்.

Also Read: மானம் மரியாதை சூடு சொரணை இல்லாமல் திரியும் குணசேகரன்.. கழுவி கழுவி ஊத்திய மருமகள்கள்

ஆனால் படம் ரிலீஸ் ஆகும் தருணத்தில் சிம்புவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மாரிமுத்து படத்திலிருந்து வெளியேறினார். ஆனால் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது, அவருக்கு பெரும் மகிழ்ச்சி அளித்ததாக சமீபத்திய பேட்டி தெரிவித்துள்ளார்.

சிம்பு தன்னுடைய வேலையை குணசேகரனிடம் காட்டினால் அவர் சும்மா இருப்பாரா என, மாரிமுத்துவின் இந்த பேட்டியை பார்த்த அவருடைய ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். என்னதான் குணசேகரன் கேரக்டர் பெண்களை இழிவு படுத்தக்கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும் அவருடைய நக்கல் நையாண்டி ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது.

Also Read: நிஜமான பரியேறும் பெருமாளாக அவமானப்பட்டவர் இவர்தான்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

Trending News