வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அப்பத்தாவிடம் ருத்ர தாண்டவம் ஆடும் குணசேகரன்.. ஜீவானந்தம் குடும்பத்தைக் காப்பாற்றும் ஜனனி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது, இவர் என்ன செய்யப் போகிறார் என்று மூளையை கசக்கிற அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. அந்த வகையில் ஜீவானந்தத்தின் அழகான குடும்பத்தை புதிதாக காட்டி அனைவருக்கும் எதிர்பார்க்காத ஒரு ஷாக்கை கொடுத்திருக்கிறார்.

அத்துடன் அந்த குடும்பத்தின் மேல் ஜீவானந்தம் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பையும், மகள் மீது இருக்கும் பாசத்தையும் ஒரு பாடலின் மூலம் அனைவருக்கும் காட்டி புல்லரிக்க வைத்து விட்டார். இந்த சூழ்நிலையில் ஜீவானந்தத்தை காலி பண்ண வேண்டும் என்ற நோக்கில் கதிர் மற்றும் சைக்கோ, அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கி விட்டார்கள்.

Also read: ஜனனி, ஜீவானந்தத்தை பார்ப்பதற்குள் சக்தி உயிரை விட்டுருவான் போல.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது எதிர்நீச்சல்

அதே நேரத்தில் ஜனனியும், ஜீவானந்தத்தை பார்த்து பேசுவதற்காக அவருடைய வீட்டிற்கு போய் கொண்டிருக்கிறார். இப்படி இந்த மூன்று விஷயங்களும் ஒரே சமயத்தில் நகர்ந்து வருகிறது. இதில் கதிரால் கண்டிப்பாக அந்த குடும்பத்திற்கு ஏதோ ஒரு பிரச்சனை ஆரம்பமாக போகிறது என்பது தெரிகிறது. இதிலிருந்து காப்பாற்ற போவது ஜனனியாக இருக்கலாம்.

இதனை அடுத்து ஜனனிக்கும் ஜீவானந்தம் ஒரு நல்ல புரிதல் ஆரம்பமாகிவிடும். அதன் படி அனைத்து விஷயங்களும் ஜனனி தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். அடுத்தபடியாக அப்பத்தா கண்விழித்து பார்த்து நடமாட ஆரம்பித்து விட்டார். இவரை பார்த்த சந்தோஷத்தில் அனைவரும் அப்பத்தாவிடம் பேச ஆரம்பிக்கிறார்கள்.

Also read: திடீரென படுத்த படுக்கையான சக்தி.. உடைந்து போகும் ஜனனி, எதிர்நீச்சல் அதிரடி ட்விஸ்ட்

ஆனால் குணசேகரன் மட்டும் இருக்க எல்லா கோபத்தையும் அபத்தாவிடம் காட்டி தாறுமாறாக வார்த்தைகளை பயன்படுத்தி ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். இவரை பொறுமையாக இருக்கச் சொல்லி ரேணுகா, நந்தினி எப்போதும் போல் அவரை அடக்க நினைக்கிறார்கள். ஆனால் எதற்கும் அடங்காமல் குணசேகரன் பட்ட அவமானத்தை மனதில் வைத்துக் கொண்டு அப்பத்தாவை சரமாரியாக கேள்வி கேட்கிறார்.

மேலும் 80 வயது கிழவி முதல் 8 வயது தாரா வரை எல்லாத்துக்கும் நான் பயப்பட வேண்டியதாக இருக்கிறது. என் நிலைமை அந்த அளவுக்கு மோசமாக போய்விட்டது எல்லாத்துக்கும் காரணம் இந்த அப்பத்தா கிழவி தான் என்று ஆங்காரமாக நடந்து கொள்கிறார். ஆனால் இதை எல்லாம் பக்கத்து வீட்டு சண்டை மாதிரி வெளியில் இருந்து வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் ஈஸ்வரி மற்றும் சக்தி.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

Trending News