சைக்கோவிடம் டீல் பேசும் குணசேகரன்.. புரியாத புதிராக இருக்கும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஒவ்வொரு நாளும் திருப்பங்கள் நிறைந்த தொடர் கதையாக வருகிறது. அந்த வகையில் ஜீவானந்தத்தின் அதிரடியான செய்கையால் பொட்டிப் பாம்பாக அடங்கிய குணசேகரன், சொத்தை மீட்டெடுப்பதற்காக பெண்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார். அடுத்ததாக இவருடைய மானத்தை மொத்தமும் காலி பண்ணியதால் ஜீவானந்தத்தை பழி வாங்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

அதற்காக சென்னையில் இருக்கும் ஒரு ரவுடியை சந்தித்து டீல் பேச போயிருக்கிறார். அந்த ரவுடி யார் என்றால் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். ஆனால் தற்போது பணியில் இல்லாததால் இவர் மூலமாக ஜீவானந்தத்தின் கதையை முடிக்க பிளான் பண்ணி இருக்கிறார். இவர் சந்திக்கும் நபர் யார் என்றால் ஏற்கனவே கோலங்கள் நாடகத்தில் போலீஸாக தில்லா என்ற கேரக்டரில் சைக்கோ மாதிரியான ஒரு ஆள்.

Also read: மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்

என்ன பண்ணுகிறோம், ஏது பண்ணுகிறோம் கூட தெரியாத அளவிற்கு பல தவறான விஷயங்களை செய்யக்கூடிய ஒரு நபர். அதே கேரக்டரை தற்போது இந்த நாடகத்திலும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். இவர் சைக்கோவாக இருந்தாலும் கோலங்கள் நாடகத்தில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தார்கள். அதனால் மறுபடியும் இவர் வந்ததால் இன்னும் நாடகம் விறுவிறுப்பாக போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

அடுத்தபடியாக ஜனனி சக்தி இவர்கள் இருவரும் சேர்ந்து ஜீவானந்தத்தின் முழு விபரங்களை சேகரிக்க தொடங்கி விட்டார்கள். அதற்காக ஜீவானந்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் இவர்களுக்கு ஒரு குழு கிடைத்துவிட்டது. இதை வைத்து ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறார்கள்.

Also read: இனிமே ஒத்த கை குணசேகரன் தான் கூப்பிடுவாங்க.. எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல்

ஆனால் கஷ்டப்படும் ஏழைகளுக்கு இவர் உதவியதால், மக்கள் மத்தியில் நல்லவராக தான் தெரிவார். அப்படி இருக்கும் பொழுது ஜனனி எல்லா விஷயங்களையும் தெரிந்த பிறகு ஜீவானந்தத்திற்கு சப்போர்ட்டாக இருப்பாரா அல்லது குணசேகரனிடம் சொன்னபடி சொத்துக்களை மீட்டு எடுக்க போகிறாரா என்பது தான் ட்விஸ்ட்டாக இருக்கப் போகிறது.

மேலும் ஜீவானந்தம் எப்பொழுது என்டரி கொடுத்தாரோ, அப்போதிலிருந்து குணசேகரன் டம்மியாகத்தான் இருக்கிறார். அதுவும் பைத்தியக்காரர் போல் புலம்பிக்கொண்டே தவிக்கிறார். ஆக மொத்தத்தில் இந்த ஜீவானந்தம் யார், உண்மையில் இவருடைய நோக்கம் என்ன என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அடுத்தடுத்து இதற்கான கதை சீக்கிரமாக கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

Also read: லாஜிக்கே இல்லாமல் சொதப்பலாக போகும் எதிர்நீச்சல்.. நேருக்கு நேராக மோதும் ஜீவானந்தம் குணசேகரன்