எதிர்நீச்சல் 2 சீரியலில் அப்பத்தாவிற்கு அடுத்து அம்மாவை டார்கெட் பண்ணிய குணசேகரன்.. ஓடோடி வந்த மருமகள்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஆணாதிக்கத்திற்கும் அராஜகத்திற்கும் ஊறிப்போன குணசேகரன் கொஞ்ச நாளைக்கு அடங்கி போய் இருந்தார். ஆனால் இந்த மாதிரி குணசேகரன் இருந்தால் ஊர் மக்களும் மதிக்க மாட்டார்கள், வீட்டிலும் மதிப்பு இருக்காது என்று தெரிந்த குணசேகரன் மொத்த அவமானத்தையும் துடைக்கும் விதமாக விஷம் குடிப்பதற்கு தயாராகினார்.

ஆனால் அப்படி குடிக்கும் பொழுது விசாலாட்சி குறுக்கே புகுந்துதல் குணசேகரன் மனசு மாறிவிட்டது. அதாவது நாம் விஷம் குடித்தால் கூட அது சரியாக இருக்காது, அதனால் இந்த விஷத்தை யார் குடித்தால் வீட்டிற்கு மருமகள்கள் வந்து விடுவார்கள் என்பதை உணர்ந்த குணசேகரன், விசாலாட்சிக்கு வலுக்கட்டாயமாக விஷத்தை கொடுத்து விடுகிறார்.

கொடுத்துவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் அம்மா விஷம் குடிச்சிருச்சு எல்லோரும் வாங்க என்று ஆர்ப்பாட்டம் பண்ணி ஒரு செண்டிமெண்ட் ட்ராமாவை போட்டுவிட்டார். உடனே வீட்டில் இருப்பவர்களும் விசாலாட்சி பார்த்து ரொம்பவே பயந்து டிரீட்மென்ட் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு சக்தி, ஜனனிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறார்.

இதைக் கேட்டதும் நான்கு பெண்களும் துடித்து போய் வீட்டிற்கு வந்து விட்டார்கள். வந்ததும் ஒவ்வொருவரும் விசாலாட்சி பக்கத்தில் நின்று நாங்கள் எங்கேயும் போக மாட்டோம். நீங்கள் சொன்னபடி எல்லா பரிகாரத்தையும் பண்ணிவிட்டு இந்த வீட்டிலேயே இருக்கிறோம் என்று வாக்கு கொடுத்து குணசேகரன் போட்ட பிளானில் சிக்கி விட்டார்கள்.

முதல் பாகத்தில் அப்பத்தாவுக்கு போட்ட பாயாசத்துக்கு பின் தற்போது விசாலாட்சிக்கு ஒரு தூண்டிலை போட்டு நினைத்ததை சாதித்து விட்டார் குணசேகரன். இனி குணசேகரன் மற்றும் நான்கு பெண்களின் யுத்தம் நடக்கப் போகிறது. இதில் எப்படி முட்டிக்கொண்டு யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது தான் அடுத்த கட்ட கதையாக இருக்கப்போகிறது.

ஆனால் இந்த நாடகத்திற்கு முக்கியமான விஷயமே பெண்கள், அவர்கள் நினைக்கும் விஷயத்தை பல தடைகளை தாண்டி எப்படி அடைகிறார்கள் என்பதுதான். ஆனால் அதை விட்டுவிட்டு கதைகள் எங்கெல்லாமோ தடம் புரண்டு தற்போது ஓரளவுக்கு விட்ட இடத்தை பிடித்திருக்கிறது. அதனால் இனியாவது முக்கியமான கதைகளை கொண்டு வந்து ஒரு புரட்சிகரமான கதையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment