வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சொத்துக்காக காவு கொடுக்க போகும் குணசேகரன்.. வேட்டை நாயின் வேட்டை ஆரம்பம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் பார்ப்பவர்களின் மனதில் நச்சென்று பதிவை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் எப்போதுமே கெத்துடன் இருக்கிறார் அப்பத்தா. குணசேகரன் செய்யும் அட்டூழியங்கள் அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக பதிலடி கொடுக்கும் சூப்பர் பவருடன் அப்பத்தா மாஸ் காட்டுகிறார்.

மேலும் அப்பத்தா, குணசேகரனிடம் வீட்டில் இருக்கும் உரிமையை பற்றி பேசி வாய பொத்தி கைகட்டி நிற்கும்படியாக அடக்கி விட்டார். இதனால் மொத்த கோபத்தையும் வீட்டில் இருப்பவர்களிடம் காட்ட முடியாமல் அப்பத்தாவின் கதையை முடிக்கும் எமனாக மாறிவிட்டார்.
அதற்காக வக்கீல் மற்றும் ஆடிட்டர் அவர்களை வரச்சொல்லி தற்போது நிலவரம் என்ன என்று கேட்டு தெரிந்து கொள்கிறார்.

Also read: எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்குத் தள்ளிய விஜய் டிவி சீரியல்.. ரொமான்ஸில் பின்னி பெடல் எடுக்கும் டாம் அண்ட் ஜெர்ரி

ஆனால் என்ன வழக்கம்போல் அவர்கள் எங்கள் கையில் ஒண்ணும் இல்லை என்று வடிவேலு பாஷையில் கையை விரித்து விடுகிறார்கள். பின்பு கடைசியில் அப்பத்தா உயிரோடு இருந்தால் தானே இவ்வளோ பிரச்சனை வருகிறது. இப்பமே அதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று குணசேகரன் கொடூர வில்லனாக மாறுகிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியில் கதிர் நிற்கிறார். இதற்கிடையில் ஜீவானந்தத்தை கொலை செய்யும் முயற்சியில் தோற்றுப் போனதை உளறிவிடுகிறார் கதிர். பின்பு இதை சூதனமாக குணசேகரன் பேசி அவர்களை திசை திருப்பி விடுகிறார். அடுத்ததாக அண்ணன் என்ன சொன்னாலும் அது வேத வாக்கு என்று கண்மூடித்தனமாக எல்லாத்தையும் செய்து வருகிறார் அல்லக்கை கதிர்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

இதனைத் தொடர்ந்து அப்பத்தாவின் உயிருக்கு எமனாக மாறிய குணசேகரனுக்கு எல்லா விதத்திலும் கூடவே இருந்து செய்யப்போவது கதிர் தான். அண்ணன் செய்கிறது பாவம் என்று தெரியாமலேயே அதல பாதாளத்திற்குள் போய் முட்டிக் கொள்ளப் போகிறார். ஆரம்பத்தில் குணசேகரன் வில்லன் மற்றும் காமெடியனாக கொண்டு வந்த கதையில் தற்போது மோசமான வில்லனாகவும் சித்தரிக்கப்பட்டு வருகிறார்.

அந்த வகையில் அப்பத்தாவை ரொம்பவே மட்டு மரியாதை இல்லாமல் கீழ்த்தனமாக பேசி வருகிறார். இதை பார்ப்பவர்கள் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய இந்த நாடகத்தில் பெரியவர்களுக்கு மரியாதை இல்லாமல் பேசும் இந்த காட்சியை ரொம்பவே தவிர்த்தால் நல்லா இருக்கும் என்று அவர்களுடைய கமெண்ட்ஸ்களை போட்டு வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு மோசமான வார்த்தையை பயன்படுத்தி வருகிறார் குணசேகரன்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

Trending News