வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அராஜகத்துக்கு மேல் அட்டூழியம் பண்ணும் குணசேகரன்.. அப்பாவாக அடைக்கலம் கொடுக்கும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், நாளுக்கு நாள் குணசேகரனின் அராஜகம் கூடிக் கொண்டே இருக்கிறது. முக்கியமாக ஆதிரையின் வாழ்க்கையை கெடுத்ததோடு மட்டுமல்லாமல் தற்போது தன்னுடைய மகளின் வாழ்க்கையை அடமானம் வைக்க துணிந்து விட்டார். அதாவது ஆதிரை, கரிகாலன் வேண்டாம் என்று முடிவு எடுத்த நிலையில் எஸ்கேஆர் வீட்டிற்கு தஞ்சம் அடைந்து விட்டார்.

இந்நிலையில் கரிகாலன் பித்து பிடித்து போல் ஆதிரையை நினைத்து மனதார வருந்துகிறார். அதன் பின் வீட்டிற்கு வந்த குணசேகரன், ஆதிரை செஞ்சதை நினைத்து கோபமாகவே இருக்கிறார். இந்த நேரத்தில் ஜான்சி ராணி தன் மகனை கூட்டிட்டு வெளியே போய் தற்கொலை செய்யப் போகிறேன் என்று குணசேகரனை பிளாக் மெயில் பண்ணுகிறார்.

அப்பொழுது குணசேகரன் என் மேல எந்த தப்பும் இல்லை, உன்னை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பொழுது என் மகளை கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று தானே சொன்னேன். அதே மாதிரி இப்பொழுது கரிகாலனுக்கும் என் மகள் தர்ஷினிக்கும் கல்யாணத்தை நடத்தி வைப்பேன் என்று ஜான்சி ராணிக்கு வாக்குறுதி கொடுக்கிறார்.

Also read: புற்று நோயினால் போராடிய எதிர்நீச்சல் நடிகை.. குணசேகரன் மருமகளுக்கு இப்படி ஒரு மறுபக்கமா.?

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஈஸ்வரி மற்றும் தர்ஷினி கெதி கலங்கி போய் நிற்கிறார்கள். இந்த நேரத்தில் வழக்கம் போல ஜனனி நாங்கல்லாம் இருக்கும். அதெல்லாம் எதுவும் நடக்காது என்று வாய் சவடால் விடுகிறார். அதற்கு தர்ஷினி நம்ம இங்கிருந்து பேசிக்கொண்டே தான் இருப்போம். ஆனால் அவர்தான் எல்லா விஷயத்திலும் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

என்னதான் குணசேகரன் சொன்னாலும் கரிகாலன் தர்ஷினி கல்யாணம் நடக்காது என்பது தான் தெரிந்த விஷயம். இருந்தாலும் குணசேகரன் ஏற்பாடு பண்ண போகும் அராஜகத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கப் போவது ஜீவானந்தம். இதற்கிடையில் தர்ஷினி ஜீவானந்தத்தை பார்த்து அப்பா என்று கூறி ஒரு உணர்வுபூர்வமான காட்சி நடந்திருக்கிறது.

அந்த வகையில் தர்ஷினிக்கு அப்பாவாக ஜீவானந்தம் அடைக்கலம் கொடுத்து குணசேகரனை எதிர்க்க போகிறார். இதில் இன்னொரு விஷயம் கரிகாலன் மனதார ஆதிரையை காதலிப்பதாக கூறி வந்த நிலையில், இப்பொழுது எப்படி மனதை மாற்றிக் கொண்டு தர்ஷனியை கல்யாணம் பண்ணுவாரு. இப்படி தொடர்ந்து அராஜகத்துக்கு மேல் அட்டூழியம் செய்து கொண்டு வருகிறார் குணசேகரன்.

Also read: குணசேகரனின் தங்கைக்கு அடைக்கலம் கொடுத்த எக்ஸ் காதலி.. எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வரும் எதிர்நீச்சல்

Trending News