புதன்கிழமை, மார்ச் 12, 2025

எதிர்நீச்சல் 2 சீரியலில் சக்தியை கோர்த்து விட்டு காரியத்தை சாதிக்கும் குணசேகரன்.. ஜனனிக்கு வச்ச ஆப்பு

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் வீட்டுக்குள் நுழைந்த பிறகு நாம் இந்த வீட்டில் இருந்தால் சரி வராது என்று முடிவு எடுத்த நான்கு பெண்களும் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்கள். ஆனால் எங்க போவது என்று தெரியாமல் தற்போதைக்கு ஹோட்டலில் தங்கி விட்டார்கள். ஆனால் அங்கேயும் சின்ன சின்ன பிரச்சினைகள் வரும் அதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்ற மாதிரி தான் ஹோட்டல் டிராக் தற்போது ஆரம்பமாக போகிறது.

அடுத்ததாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் இந்த நான்கு பெண்களும் தங்கி அவர்களுக்கு ஏற்ற வேலையை செய்து ஜெயித்து முன்னேற போகிறார்கள். இதற்கிடையில் சக்தி நம் பக்கத்தில் வந்து விட்டான் இவனை மறுபடியும் ஜனனி பக்கம் அனுப்பி விடக்கூடாது என்று யோசித்த குணசேகரன், திருடன் கையிலே சாவி கொடுத்தால் சரியாக இருக்கும் என்று முடிவு பண்ணி விட்டார்.

அந்த வகையில் தர்ஷன் மற்றும் அன்புக்கரசியின் கல்யாணத்தை பிடிக்காமல் இருக்கும் சக்திக்கு அந்த கல்யாணத்தை நடத்தி வைக்கும் பொறுப்பை கொடுத்து விட்டார். சக்தியும் இதுவரை சொன்ன விஷயம் என்னவென்றால் மனசில் பட்ட விஷயங்களை என்னால் செய்ய முடியாமல் இத்தனை நாளாக ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தேன். அப்படி நான் இருக்க மாட்டேன் என்று சொல்லி தான் நான்கு பெண்களிடமும் சண்டை போட்டு குணசேகரன் பக்கம் சாய்ந்தார்.

ஆனால் தற்போது குணசேகரன் பக்கம் வந்த பிறகும் அதே நிலைமைதான் சக்திக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப பிடிக்காத விஷயத்தை செய்யும்படி வற்புறுத்தியதால் தர்ஷன் கல்யாண ஏற்பாடுகளை பண்ணுவதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் அறிவுக்கரசி ஏற்பாடு பண்ணும் கல்யாண வேலைகளை செய்வதற்கான மேனேஜரை சந்திக்கும் வகையில் சக்தி பார்க்கும் நபர் தான் குந்தவை.

இந்த குந்தவை ஏற்கனவே முதல் பாகத்தில் சக்தியை கல்யாணம் பண்ண சிங்கப்பூரில் இருந்து வந்தவர். தற்போது மறுபடியும் குந்தவை வந்ததால் ஜனனிக்கு ஆப்பு வைக்கும் விதமாக கதை இருக்கப் போகிறது. அதாவது இதுவரை ஜனனியுடன் சக்தி இருக்கும் பொழுது நல்ல கணவராக சக்தி இருந்த நிலையில் ஒரு சிறந்த மனைவியாக ஜனனி இருக்க தவறிவிட்டார்.

பக்கத்தில் இருக்கும் பொழுது அருமை தெரியாமல் சக்தியை ஒரு டம்மியாகவும் வேலைக்காரன் போல் அலட்சியப்படுத்தியதால் மனதளவில் சக்தி தற்போது நொறுங்கிப் போய் இருக்கிறார். அந்த வகையில் சக்திக்கு ஆறுதலாகவும், சக்தி மனநிலை ஏற்ற மாதிரி குந்தவை இருக்கப் போகிறார். ஏற்கனவே குணசேகரன் கதிர் மற்றும் ஞானம் இவர்களுடைய திமிரு ஆனாதிக்கம் மூலம் பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்களை கணவராக கூட ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

சக்தி மட்டும் கொஞ்சம் உருப்படியாக இருந்த நிலையில் அவருடைய கேரக்டரையும் டேமேஜ் பண்ணும் வகையில் அமையப் போகிறது. அந்த வகையில் இந்த நான்கு பெண்களும் கணவர்கள் இல்லாமலேயே சாதித்துக் காட்டி வாழ்க்கையை வாழ போகிறார்கள் என்பதுதான் கதையாக இருக்கப் போகிறது.

Trending News