Ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை, அம்மாவின் நிலைமை பார்த்து ஆவேசமாக பொங்கியதால் வீட்டில் இருக்கும் அண்ணிகளிடம் கொஞ்சம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதனால் வாய்க்கு வந்தபடி வார்த்தைகளால் பேசி ஈஸ்வரியை நோகடிக்கிறார். இதனை பார்த்த குணசேகரனின் அம்மா விசாலாட்சி, என் மருமகளை பற்றி எனக்கு தெரியும்.
நாங்கல்லாம் வேண்டாம் என்று என்னைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் வீட்டை விட்டு போனவள் தானே நீ. இப்ப மட்டும் உனக்கு எங்கிருந்து புதுசா பாசம் வந்திருக்கிறது. ஒழுங்கா இந்த வீட்டில் இருக்கணும்னா இரு இல்லையென்றால் போ என்ன ஆதிரையை விசாலாட்சி திட்டி விட்டார். உடனே நந்தினி, ஆதிரைக்கு என்னாச்சு, ஏன் திடீரென்று அவள் அண்ணன் மாதிரி நடந்து கொள்கிறது என்று புலம்புகிறார்.
அதைவிட மாமியார் நமக்காக சப்போர்ட் பண்ணுவதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்று சொல்கிறார். உடனே ஜனனி, என்னதான் லட்சியத்திற்காக போராடினாலும் நம்முடைய குணங்கள் என்றைக்கும் மாறக்கூடாது. அதுதான் நம்மளுடைய அடையாளம் என்று ஜனனி தெளிவான அட்வைஸை நந்தினிக்கு கொடுக்கிறார்.
இதனை தொடர்ந்து ஜெயிலில் இருக்கும் குணசேகரனை பார்ப்பதற்காக கதிர் ஞானம் மற்றும் சக்தி அனைவரும் ஜெயிலுக்கு போகிறார்கள். ஆனால் உள்ளே இருக்கும் குணசேகரன், நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை கதிர் மட்டும் என்னை பார்த்தால் போதும் என்று லாயரிடம் சொல்லுகிறார். அதன்படி கதிர் மட்டும் உள்ளே போகிறார். அப்பொழுது ஜாமினில் இந்த முறை நிச்சயம் எடுத்துடுவோம் என்று லாயர் சொல்கிறார்கள்.
உடனே குணசேகரன் அதற்கு முன் சில விஷயங்களை மாற்ற வேண்டும் என்று அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது லாயர், உங்க மனைவி வீட்டிற்குள் வந்த பொழுது எங்க அண்ணன் இல்லாமல் நீங்கள் இந்த வீட்டிற்கு வர அனுமதி கிடையாது என்று கதிர் சொன்னதற்காக சக்தி, கதிரை அடித்துவிட்டார் என்று சொல்கிறார். உடனே குணசேகரன் என்னது என் தம்பியை அடித்து விட்டானா என்று கோபப்பட ஆரம்பித்து விட்டார்.
அடுத்ததாக சாறுபாலாவை பார்த்து பேசுவதற்காக ஜனனி ஈஸ்வரி நந்தினி மற்றும் ரேணுகா அனைவரும் போகிறார்கள். அப்பொழுது சாறுபாலா, ஈஸ்வரியை பார்த்து குணசேகரன் மீது கொடுத்த கேஸ் மீது உறுதியாக இருக்கிறீர்களா? இல்லையென்றால் உங்க மனசு மாறி விட்டதா என்று கேட்கிறார். அந்த வகையில் ஈஸ்வரி, இந்த முறை நாம் எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். அவங்க தம்பிகள் முயற்சி பண்ணி ஜாமீன் கிடைத்தால் கிடைக்கட்டும்.
நாம் எதையும் தடுக்க வேண்டாம் என்று ஈஸ்வரி போடும் கையெழுத்தினால் குணசேகரன் இந்த முறை ஜெயிலில் இருந்து வெளியே வந்து விடுவார். ஆனாலும் குணசேகரன் கண் முன்னாடியே அந்த வீட்டு மருமகள்கள் ஈஷ்டப்பட்ட வாழ்க்கை வாழும் விதமாகவும், சொந்த காலில் நின்னு ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாத அளவிற்கு குணசேகரன் கண் முன்னாடியே வாழ்ந்து காட்டப் போகிறார்கள்.