Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் கழுத தேஞ்சு கட்டெறும்பு போன கதையாக தான் தலைகீழாக மாறிவிட்டது. கதைக்கும் நாடகத்துக்கும் சம்பந்தமே இல்லாத வகையில் புதுப்புது கதாபாத்திரங்களை கொண்டு வந்து திசை திருப்பி வருகிறார்கள். தற்போது குணசேகரன் நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலு என்பதற்கு ஏற்ப கரிகாலனுக்கும் தர்ஷினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அலைகிறார்.
ஆனால் தர்ஷினி இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால் நான் எடுக்கப் போகும் முடிவு வேற மாதிரி இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். இதற்கிடையில் அவ்வப்போது தர்ஷினியை சீண்டிப் பார்க்கும் விதமாக குணசேகரன் ஒவ்வொரு விஷயத்தையும் செய்கிறார். அந்த வகையில் தர்ஷினி பள்ளிக்கூடத்திற்கு கிளம்பும் போது ஜான்சி ராணி அனைவரது முன்னாடியும் வம்புக்கு இழுக்கிறார்.
அப்பொழுது கரிகாலன், தர்ஷினி எங்க படிக்கப் போகுது, எல்லாத்தையும் அடிக்க கத்துக்க போகிறார் என்று உளறி விடுகிறார். உடனே குணசேகரன் என்னது அடிக்க போகிறாளா என்று கேட்க அதற்கு கரிகாலன் உங்க பொண்ணுடைய ஒரு முகம் தானே தெரியும், அதுக்கு இன்னொரு முகமும் இருக்கு என்று தர்ஷினியை போட்டுக் கொடுக்கும் விதமாக நாரதர் வேலையை பார்த்து விடுகிறார்.
Also read: ரெண்டு பிள்ளைகளுடன் கூத்தடிக்கும் கோபி.. பாக்யாவை சமாளிக்க போகும் ராதிகா
இதைக் கேட்டு அதிர்ச்சியான குணசேகரன் எழுந்து தர்ஷினி இடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இவ்வளவு விஷயங்கள் நடந்தும் அங்கே அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் வழக்கம்போல் வேடிக்கை மட்டும் தான் பார்த்து வருகிறார்கள். குணசேகரன் இல்லாத பொழுது வண்டி வண்டியா பேசி புலம்ப மட்டும் தான் தெரியும். மற்றபடி எங்களால் ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எல்லாரும் ஒரு பக்கத்துல நின்னு முழிச்சிட்டு இருக்காங்க.
இதற்கு இடையில் நாச்சியப்பன் இடம் இருந்து பார்வதியை பிரிக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் சதி தீட்டி பார்வதியை கோவிலுக்கு வரவழைத்து தாலியை கழட்ட வைக்கிறார்கள். இதையும் வேடிக்கை பார்த்து நாச்சியப்பன் அமைதியாக இருப்பது இத்தனை நாளாக வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாத அளவிற்கு டேமேஜ் பண்ணிவிட்டார்.
அதே மாதிரி நாச்சியப்பனின் அக்கா மற்றும் அம்மா குணசேகரன் வீட்டிற்கு வந்த பொழுது கதிர் எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கு. அதற்கு ஏற்ற உறவு முறையை நாங்கள் ஏற்படுத்த போகிறோம் என்று சொன்ன ஒரு விஷயத்தில் மறைமுகமான சம்பவம் ஏதோ நடக்க போகிறது. அந்த வகையில் ஒருவேளை ராமசாமி மெய்யப்பனுக்கும் தர்ஷினிக்கும் ஏதாவது முடிச்சு போடலாம் என்று நினைக்கிறாரோ என்னமோ. ஆக மொத்தத்தில் இந்த சீரியலின் பாடல் வரிகளுக்கு ஏற்ப பெண்களுக்கு எந்த முன்னேற்றமும் நடப்பதாக தெரியவில்லை.
Also read: தம்பிக்கு பாசத்தைக் காட்டி தூபம் போடும் குணசேகரன்.. சக்தியை போல் ரெமோவாக மாறிவரும் கதிர்