புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பக்காவாக காய் நகர்த்தும் ஜனனி.. மாட்டிக்கொண்டு முழிக்க போகும் குணசேகரன்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் சமீப காலமாக பல ரசிகர்கள் மனதை ஈர்த்து வருகிறது. குணசேகரன் நினைத்தபடி ஆதிரையின் திருமணம் கரிகாலன் கூட நடக்க வேண்டும் என்பதற்காக தற்போது கல்யாணத்திற்கு தாலி செயின் எடுக்க கடைக்கு போயிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அருண் மனதை மாற்றி ஜனனி, ஆதிரையை பார்த்து பேசுவதற்கு கூட்டிட்டு வருகிறார்.

பிறகு ஜனனி கடைக்கு வந்து ஆதிரையை கூப்பிடுகிறார். அங்கு இருந்த ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் ஆதிரையை எங்க கூப்பிடுற என்று கேட்க இவர்களை சமாளிக்கும் விதமாக ரேணுகா நந்தினி அவர்களை கிண்டல் அடித்து டைவர்ட் பண்ணி ஆதிரையை வெளியே அனுப்பி வைக்கிறார்கள். ஒன்றும் புரியாமல் போன ஆதிரை அருணை பார்த்து சந்தோஷப்பட்டு இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

Also read: குணசேகரன் வாங்கும் மரண அடி.. ஒட்டு மொத்த குடும்பமும் வைக்கும் ஆப்பு

அடுத்து வெளியே வந்த கரிகாலனை சக்தி ஆதிரை பக்கம் போகவிடாமல் தடுத்து நிறுத்தி விடுகிறார். அடுத்து அருண் ஆதிரை பேசி இனிமேல் ஒருத்தரை ஒருத்தர் பிரிய வேண்டாம் நம்மளுடைய கல்யாணம் கண்டிப்பாக நடக்கும் எதற்கும் இனி பயப்படத் தேவையில்லை என்று பேசிக் கொள்கிறார்கள். பிறகு உள்ளே போன ஆதிரை சந்தோஷத்தில் கரிகாலனுக்கு எந்தவித சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக அவரிடம் கொஞ்சம் நல்லா பேசுகிறார். ஒருவிதத்தில் கரிகாலனை கோமாளியாக இவர்கள் நினைப்பது பாவமாகத்தான் இருக்கிறது.

உடனே கரிகாலனும் ஆதிரை மனது மாறிவிட்டது என்ற சந்தோஷத்தில் இருக்கிறார். அடுத்து கதிரை பார்த்த ஒருவர் சக்தியுடன் காரில் அருண் போகிறார் அதை நான் பார்த்தேன். என்ன நடக்குது என்று கேட்க தான் வந்தேன் என்று சொல்கிறார். இதற்கு அப்புறம் கதிருக்கு சந்தேகம் வரதான செய்யும். வந்தால் சும்மாவா இருப்பான் பற்றவைப்பதற்கு குணசேகரனிடம் போய் சொல்கிறான்.

Also read: கொக்கி குமாருக்கு, விக்ரம் கொடுக்கும் அடி.. குடும்ப சண்டை ஆரம்பித்த இனியா

அடுத்ததாக வீட்டிற்கு அனைவரும் வந்த பிறகு குணசேகரன் ஜனனிடம் என்ன தில்லு முல்லு  வேலை பண்ணிக்கிட்டு இருக்க.  எனக்கு தெரியாம என்ன வேலை பார்த்துகிட்டு இருக்க என்று கேட்க ஜனனி அதை சமாளிக்கும் விதமாக ஏதோ சொல்லுகிறார். உடனே கதிர் மற்றும் குணசேகரன் சக்தியை எங்கே என்று கேட்கிறார். அதற்கு ஜனனி வேலை விஷயமாக வெளியூர் போயிருக்கிறார் என்று சொல்ல அதை நம்பாமல் போன் போட்டு விசாரிக்கிறார். பிறகு ஒரு வழியாக இவர்களை சமாளித்து விடுகிறார் ஜனனி.

பிறகு ஆதிரை, அன்னிகள் அனைவரிடம் எனக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்குறீங்க ரொம்ப சந்தோஷம் என்று நன்றி கூறுகிறார். அதற்கு நந்தினி உனக்காக யாரு இவ்ளோ தூரம் கஷ்டப்படுற  உங்க அண்ணனை தோற்கடித்ததுக்கு தான் என்று சொல்கிறார். எது எப்படி இருந்தாலும் ஜனனி பக்காவாக குணசேகரனை தோற்கடிப்பதற்கு ப்ளான் போட்டு வருகிறார். இவர்களுக்கு இடையில் குணசேகரன் மாட்டிக்கொண்டு தோற்றுப் போய் முழிக்க போகிறார்.

Also read: ஐஸ்வர்யாவின் ஆடம்பரத்தால் நெற்கதியாக நிற்கும் கண்ணன்.. பகடைக்கையாக மாட்டிக்கொண்ட கதிர்

Trending News