வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

படுத்த படுக்கையாக இருந்தும் நக்கல் குறையாத குணசேகரன்.. புருஷனுக்காக ஜீவானந்திடம் பிச்சை கேட்கும் ஈஸ்வரி

Ethirneechal Serial: சீரியல் மூலமாக அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ஒரே நாடகம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தான். கதை களத்தை மிஞ்சும் அளவிற்கு குணசேகரனின் எதார்த்தமான நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. அதாவது பணம்,வசதி, சொத்து இருந்தால் மானம் மரியாதையுடன் கெத்தா வாழலாம் என்று இருந்த குணசேகரனிடம் இருந்து ஒவ்வொன்றாக உருவிக்கொண்டு வருகிறார் ஜீவானந்தம்.

என்னதான் குணசேகரன் மற்றவர்களிடமிருந்து சொத்தை ஆட்டைய போட்டிருந்தாலும், அதை சரி செய்ய ஜீவானந்தம் தற்போது ரவுடிசம் செய்து ஒவ்வொன்றாக அபகரித்து வருகிறார். இது எப்படி இருக்கிறது என்றால், 20 வருடங்களுக்கு முன் எப்படி குணசேகரன் இருந்தாரோ, அதையே தான் ஜீவானந்தம் தற்போது செய்து வருகிறார் என்பது போல் தான் இருக்கிறது.

Also read: வில்லத்தனத்தையும் தாண்டி அழுது சிரிக்க வைத்த குணசேகரன்.. கொஞ்சம் கூட அசராமல் அடிக்கும் ஜீவானந்தம்

ரெண்டுக்கும் பெருசா வித்தியாசம் ஒன்னும் இல்லை. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இந்த ஒரு விஷயம் லாஜிக்கே இல்லாமல் தான் நகர்ந்து வருகிறது. அடுத்ததாக ஜீவானந்தம், குணசேகரனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்ததால் தற்போது ஆஸ்பத்திரியில் இருக்கும் நிலைமை ஆகிவிட்டது. பின்பு இவருக்கு ஒத்த கை சரியாக வேலை செய்யாது என்று மருத்துவர்கள் சொல்லிவிடுகிறார்கள்.

இதைக் கேட்டு அதிகமாக துடித்து கண்ணீரும், கம்பளமாய் இருக்கிறது கதிர் மட்டுமே. இந்தக் கல் மனதிற்குள்ளும் ஒரு ஈரம் இருக்கிறது போல உண்மையாகவே பாசத்தை கொட்டுகிறார். ஆனால் கதிர், அண்ணி என்று கூட பாராமல் வாய்க்கு வந்தபடி ரொம்பவே கேவலமாக பேசி விடுகிறார். அத்துடன் அண்ணனையும் பார்க்கவிடாமல் ஈஸ்வரியை வெளியே துரத்தி விடுகிறார்.

Also read: ஜீவானந்தத்தின் வீக்னஸ் பாயிண்ட்டை குறி வைக்கும் குணசேகரன்.. தலைவன் கதறி அழும்போது குமுறி சிரித்த மருமகள்கள்

பிறகு மருமகள்கள் அனைவரும் ஜீவானந்தத்தைப் பற்றி மோசமாக பேசிக் கொள்கிறார்கள். இதற்கு இடையில் ஈஸ்வரி நான் போய் நியாயம் கேட்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் ஜீவானந்தத்தை நேரடியாக பார்க்க முடியாததால் கௌதமிடம் பேசப்போகிறார். அதாவது வேண்டாத புருஷன் என்றாலும் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் ஈஸ்வரி, ஜீவானந்தம் இடம் மடிப்பிச்சை கேட்கப் போகிறார்.

அடுத்ததாக குணசேகரன் படித்த படுக்கையில் இருந்தும், இவருடைய நக்கல் தனமான பேச்சும் மற்றவர்களை குத்தி காட்டு பேசுவதும் கொஞ்சம் கூட குறையவில்லை. ஒரு வழியாக குணசேகரனை பார்க்க வந்த மருமகள்கள் பொருட்காட்சி போல் வேடிக்கை பார்க்கிறார்கள். இதுல நந்தினியோட காமெடியை மிஞ்சிக்கவே முடியாது. ஆக மொத்தத்தில் ஒரு சீரியஸான கதையை கூட நகைச்சுவையாக கொண்டு போவது தான் இந்த நாடகத்தின் மிகப்பெரிய சிறப்பாக இருக்கிறது.

Also read: ஜனனிக்கு வார்னிங் கொடுக்கும் கௌதம்.. பகல் கனவு காணும் குணசேகரன்

- Advertisement -spot_img

Trending News