புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கொடூர கல் நெஞ்சக்காரனாக தங்கையை கதறவிட்ட குணசேகரன்.. தாறுமாறாக கிழித்த ஜான்சிராணி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆதிரையை அவருடைய வீட்டிற்கு கூட்டிட்டு போவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் புகுந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று ஜான்சி ராணி வீட்டில் விட்டு விடுகிறார். இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஆதிரை ரொம்பவே கெஞ்சி பார்த்து காலில் விழுந்து அழுகிறார். ஆனால் குணசேகரன் இதுதான் உன் வீடு இனிமேல் அது உன்னுடைய அம்மா வீடு என்று கட்டன் ரைட்டாக பேசி விடுகிறார்.

இந்த நிலைமையில் ஆதிரையை பார்க்கும் பொழுது ரொம்பவே பாவமாக இருக்கிறது. ஆனாலும் இதற்கெல்லாம் அசராத குணசேகரன் ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். இதற்கிடையில் குணசேகரனுக்கு ஏத்த சம்மந்தியாகவும், வில்லியாகவும் ஜான்சி ராணி தான் சரியான ஆளு என்று சொல்லும் அளவிற்கு நேற்றைய எபிசோடு இருந்தது.

Also read: சேர்த்து வைத்த மொத்த பெயரையும் டேமேஜ் செய்த எதிர்நீச்சல்.. காரி துப்புவதால் டிஆர்பி-யும் போச்சு

அதாவது கரிகாலன் மற்றும் ஆதிரைக்கு, ஆர்த்தி எடுக்கும் பொழுது குணசேகரன் தட்டில் பணத்தை போடுகிற நேரத்தில் ஜான்சி ராணி நன்றாகவே நாற கேள்வி கேட்டு விடுகிறார். ஜான்சி ராணியோட எண்ணமே குணசேகரனின் சொத்தை அபகரிப்பது தான். அதை ஒவ்வொன்றாக பிடுங்குவதற்கு எல்லா வித்தையும் தெரிந்து வைத்திருக்கிறார். எப்படி பேசினா குணசேகரன் ஆட்டம் கழண்டு விடும் என்று தெரிந்து நாளு கேள்வி கேட்டதும் அப்படியே ஆடிப் போய்விட்டார்.

இதை பார்க்கும் பொழுது உனக்கு இது மட்டும் இல்ல இன்னும் வேண்டுமென்று சொல்லும் அளவிற்கு நமக்கு ஆனந்தமாக இருந்தது. பிறகு குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் இவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அங்கே இவருடைய அம்மா என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் மகளை, மனசுல பிடித்தவரோடு வாழனும்னு ஆசைப்பட்டதை தவிர அவ என்ன தப்பு பண்ணிட்டா? இவ்வளவு கல் நெஞ்சக்காரனாவா இருக்கீங்க என்று குணசேகரின் அம்மா புலம்புகிறார்.

Also read: ஆண் தோற்றால் அனுபவம் பெண் தோற்றால் அவமானம்.. குணசேகரனிடம் கேவலமாக தோற்றுப் போன ஜனனி

அடுத்து ஜனனி சக்தி வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களிடம் குணசேகரன் ஜெயித்த திமிரில், ஜனனியை பார்த்து உன் தோல்வியை ஒத்துக்கிட்டு என்னிடம் ஒழுங்காக மன்னிப்பு கேளு என்று சொல்கிறார். ஆனால் அதற்கு ஜனனி தோற்றது நீங்கதான் என்று சொல்கிறார். இதை பார்த்த கதிர், ஜனனியே தாறுமாறாக பேச உடனே சக்தி கதிர் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விடுகிறார்.

அத்துடன் என் பொண்டாட்டி மேல யார் கை வைத்தாலும் வச்சு பார்க்க மாட்டேன் என்று ஆவேசமாக பேசுகிறார். ஆனாலும் இன்னும் எந்த நம்பிக்கையில் தோற்றது நீங்கதான் என்று குணசேகரனை பார்த்து சொல்கிறார் என்று புரியவில்லை. இன்னும்மா இந்த உலகம் ஜனனியே நம்பிகிட்டு இருக்கு?

Also read: உண்மையை மறைக்கும் தனம், மீனா.. செண்டிமெண்ட் சீனயை வைத்து உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Trending News